“கிரிக்கெட் கூட விளம்பரத்தையும் கவனிச்சா எப்படி விளையாடறது?” – ஹர்திக் பாண்டியாவை நேரடியாக தாக்கிய கபில்தேவ்!

0
132
Kapil Dev

இந்திய கிரிக்கெட்டுக்கு இன்றளவில் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு ஆள்ரவுண்டராக 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் மற்றும் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கபில் தேவ்தான் இருக்கிறார்!

அந்த அளவிற்கு இந்தியாவிற்கு வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் பஞ்சம் என்பது பல ஆண்டு காலமாக இருந்து வருகிறது. ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கிடைப்பது கடினம் என்றாலும் கூட, இந்தியா, போன்ற மிகப் பெரிய கிரிக்கெட் நாட்டில், பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் இன்னும் உருவாகி வராதது பின்னடைவுதான்.

- Advertisement -

கபில் தேவுக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டுக்கு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக இர்ஃபான் பதான் கிடைத்தார், ஆனாலும் இந்திய கிரிக்கெட்டின் சோகம் அவரால் அதிக காலம் நீடிக்க முடியவில்லை.

இர்ஃபான் பதானுக்கு பிறகு சமீபத்தில் ஹர்திக் பாண்டியா கிடைத்தார். ஆனால் அவர் இடையில் காயம் அடைந்து தற்பொழுது டெஸ்ட் கிரிக்கெட் விளையாட முடியாதவராக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இன்னும் அவரது உடல் முழுமையாக எவ்வளவு தாக்கு பிடிக்கும் என்று தெரியாமல் இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டில் இந்த பிரச்சனை குறித்து பேசி உள்ள கபில் தேவ் ” நான் இந்த பிரச்சனை குறித்து ரவி சாஸ்திரி பேசியுள்ள கருத்துக்கு மதிப்பளிக்கிறேன். ஆனால் டென்னிஸ் லில்லியை விட வேறு யாரும் அதிகப்படியான காயங்களை அடைந்திருக்க முடியாது. ஆனாலும் அவர் மீண்டும் திரும்பி வந்தார். அதனால் நான் ரவி சாஸ்திரியின் கருத்தை நம்பவில்லை. மனித உடல் எந்த நிலையிலும் இருந்து திரும்பி வரலாம். மீண்டும் மேல் நிலைக்கு செல்லலாம்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா என்று சொன்னால் அவர் மிகவும் திறமையான நல்ல வீரர். அவர் பழைய நிலைக்குத் திரும்பி வர மிக கடினமாக உழைக்க வேண்டும். ஏன் அவர் உடல் கடினமாக உழைப்பதற்கு ஒத்துழைக்கவில்லையா? அவர் மீண்டு வருவதை நோக்கி உழைக்கத் தொடங்கினால் அவரால் முடியும்.

தற்காலத்தில் கிரிக்கெட் கடினமாகத்தான் இருக்கிறது டி20 கிரிக்கெட் வடிவமும் இருக்கிறது. எங்களிடம் அப்பொழுது கிரிக்கெட் மட்டுமே இருந்தது, இப்பொழுது டி20 கிரிக்கெட்டோடு சேர்த்து வீரர்களுக்கு விளம்பரங்களும் இருக்கிறது. ( சிரிக்கிறார் ). நான் இதை சொல்லக்கூடாது என்றுதான் தவிர்த்து வந்தேன். எங்களிடம் கிரிக்கெட் மட்டுமே இருந்ததால் எங்களால் சிறந்த ஆல்ரவுண்டர்களாக இருக்க முடிந்தது.

இர்பான் பதான் சிறந்தவராக வருவார் என்று நினைத்தேன். ஆனால் அவரது காலம் சீக்கிரத்தில் முடிந்து விட்டது. அதேபோல் ஹர்திக் பாண்டியாவாலும் சிறந்தவராக வர முடியும். அதற்கு அவர் கடினமாக உழைத்தால் நடக்கும். இல்லை என்றால் முடியாது.

மேலும் ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வினை ஆல்ரவுண்டர்களாக நாம் பார்க்கவில்லை. மகேந்திர சிங் தோனிக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் ரன் சராசரி 50 க்கு மேல் இருக்கிறது. அவர் சிறந்த கேப்டன் மற்றும் சிறந்த விக்கெட் கீப்பர். நாம் ஏன் அடுத்த தோனி வேண்டும் என்று கேட்கக் கூடாது?” என்று கூறியிருக்கிறார்!