அர்ஜுன் டெண்டுல்கர் பந்துவீச்சு எப்படி இருக்கிறது – சச்சினுக்கு பந்து வீசிய பொல்லாக் கருத்து!

0
831
Pollac

நேற்று ஹைதராபாத் மும்பை அணிகள் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!

முதலில் விளையாடிய மும்பை அணிக்கு கேமரூன் கிரீன் 40 பந்துகளில் 62 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்து தர, 20 ஓவர்கள் முடிவில் 192 ரன்கள் மும்பைக்கு கிடைத்தது!

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய ஹைதராபாத் அணி இலக்கை எட்டக்கூடிய அளவிலேயே தொடர்ந்து வந்து கிளாசன், மயங்க் அகர்வால் மற்றும் வாஷிங்டன் சுந்தர் மூவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்த காரணத்தால் தோல்வி அடைய வேண்டியதாக இருந்தது.

மும்பை அணியின் வேகப்பந்து வீச்சு பலமாக பும்ரா மற்றும் ஆர்ச்சர் இருந்த நிலையில் இருவருமே விளையாட முடியாத சூழலில் புதிய வேகப்பந்து வீச்சு கூட்டணியை வைத்து கேப்டன் ரோகித் சர்மா விளையாட வேண்டியதாய் இருக்கிறது. குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இந்த முறை மும்பை அணிக்காக அறிமுகமாகி இரண்டு போட்டிகளாக விளையாடி வருகிறார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் பந்து வீச்சு குறித்து அவரது தந்தை சச்சினுக்கு பந்து வீசிய ஷான் பொல்லாக் குறிப்பிடுகையில் ” அவருக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இரண்டிலுமே அவர் சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறார். அவர் பந்தை சிறிது ஸ்விங் செய்தார். மேலும் லைனை இறுக்கமாக வைத்திருந்தார். இன்று இறுதி கட்ட ஓவர்களில் பந்து வீசிய பொழுது அவர் அழுத்தத்தை உணர்ந்து இருப்பார். அவர்கள் எட்டு விக்கட்டை இழந்திருந்த பொழுது அவருக்கு வழங்கப்பட்ட வேலையை அவர் சிறப்பாக முடித்தார். இது மும்பை ரசிகர்களுக்கும் இந்திய ரசிகர்களுக்கும் உற்சாகமான நேரம்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” ரோகித் சர்மா ஆட்டத்தை நன்கு உணர்ந்து பந்துவீச்சாளர்களை ஒவ்வொரு போட்டிகளும் மிகச் சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். பந்துவீச்சாளர்களை நம்பி செல்லும் அவர் இதற்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கிறது. நம்பிக்கையான ஒரு பந்துவீச்சு கூட்டணியை அமைக்க அவருக்கு சிறிது காலம் எடுக்கும். ஒவ்வொரு வெற்றியின் போதும் அவர் தனது பந்துவீச்சுக் குழுவை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!