நேற்று போட்டி முடிந்து இந்திய அணியினரை சந்தித்த ஹாங்காங் வீரர்கள்; வீடியோ இணைப்பு!

0
101
Ind vs Hkg

நேற்று 15வது ஆசிய கோப்பையில் இந்தியா ஹாங்காங் அணிகள் மோதிய போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி ஹாங்காங் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தனது குழுவில் முதல் அணியாக தகுதி பெற்றிருக்கிறது!

ஹாங்காங் அணி நடப்பு ஆசிய தொடருக்கு தகுதிச் சுற்றின் மூலமே தேர்வானது. தகுதி சுற்றில் போட்டியை நடத்தும் ஐக்கிய அரபு அமீரக அணியோடு மற்றும் 2 அணிகளை வீழ்த்தி தகுதி பெற்றது.

- Advertisement -

இந்தத் தகுதி சுற்று போட்டியில் ஹாங்காங் அணியின் ஆப் ஸ்பின் பந்து வீச்சாளர் எசாய் கான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதையும் பெற்று இருந்தார். இவர் ஹாங்காங் அணியில் மிக முக்கிய வீரராக பந்துவீச்சு துறையில் விளங்கி வருகிறார்.

நேற்றைய போட்டிக்கு முன்பாக இவர் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்து இருந்தார். ஒருவேளை அவரது விக்கெட்டை வீழ்த்த முடியாது போனாலும் அவரோடு சேர்ந்து விளையாடுவது மிகப்பெரிய அதிர்ஷ்டம் ஆகும் என்று தெரிவித்திருந்தார்.

நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இவர் இந்திய அணியில் ரோகித் சர்மா மகேந்திர சிங் தோனி ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். நேற்று நடந்த போட்டியிலும் 4 ஓவர்கள் முழுதாய் வீசிய இவர் மிகச் சிறப்பாக பந்து வீசி இருபத்தி ஆறு ரன்கள் மட்டுமே கொடுத்தார். இவரது பந்துவீச்சு பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆப் ஸ்பின் பவுலர் ஷக்லைன் முஷ்டாக் அவரின் பந்துவீச்சை நினைவுபடுத்துவதாக இருந்தது.

- Advertisement -

நேற்றைய போட்டி முடிந்த பிறகு இவர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை சந்தித்து இருவரோடும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இவர் மட்டும் அல்லாது போட்டி முடிந்த பிறகு அந்த அணியின் பல வீரர்கள் இந்திய வீரர்களோடு நீண்ட நேரம் உரையாடியும், புகைப்படம் எடுத்துக்கொண்டும் பிரியா விடை பெற்றார்கள். அவர்களுக்கு இந்த சந்திப்பு மகிழ்ச்சியான ஒன்றாக மட்டுமில்லாமல் நல்லதொரு அனுபவமாக இருந்திருக்கும். நேற்று போட்டி முடிந்த பிறகு ஹாங்காங் அணி வீரர்கள் இந்திய அணி வீரர்களோடு இருந்த வீடியோவின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.