ஹிட் விக்கெட் ; மன்கட் ரன் அவுட் ; கடைசிப் பந்து வரை பரபரப்பாக சென்ற போட்டியில் லக்னோ ஆர்.சி.பி-யை வீழ்த்தியது!

0
228
Ipl2023

பதினாறாவது ஐபிஎல் சீசனில் தற்பொழுது பெங்களூர் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நடந்து முடிந்திருக்கும் போட்டிதான், அதிகபட்ச பரபரப்பான போட்டியாக இந்த சீசனில் இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு போட்டி இருந்தது!

டாசை தோற்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணிக்கு விராட் கோலி 61, மேக்ஸ்வெல் 59, கேப்டன் பாப் 79 என அதிரடியாக அரை சதங்கள் விளாசி தர, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 212 ரன்களை இரண்டு விக்கட்டுகள் இழப்பிற்கு பெங்களூர் அணி குவித்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து களம் இறங்கிய லக்னோ மணிக்கு முதல் ஓவரிலேயே ரன்கள் இல்லாமல் கையில் மேயர்சை வழி அனுப்பி சிராஜ் அதிர்ச்சி அளித்தார். அதற்கடுத்து தீபக் ஹூடா 9, குர்னால் பாண்டியா 0 என வரிசையாக வெளியேறினார்கள்.

இதற்குப் பின் கேப்டன் கே எல் ராகுலுடன் இணைந்து ஸ்டாய்னிஸ் அபாரமான அதிரடியை காட்டினார். 30 பந்துகளில் 6 பவுண்டரி, ஐந்து சிக்ஸர்கள் உடன் 65 ரன்கள் எடுத்து அவர் வெளியேறினார். அடுத்து உடனே கேப்டன் கே எல் ராகுல் 20 பந்தில் 18 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்குப் பின் ஆட்டம் பெங்களூர் கைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் உள்ளே வந்த நிக்கோலஸ் பூரன் மொத்தத்தையும் மாற்றி விட்டார். வெறும் 15 பந்துகளில் அரை சதத்தை அடித்து பெங்களூர் பந்துவீச்சாளர்களை மட்டும் இன்றி ரசிகர்கள் வரை மிரட்டினார். எங்கேயோ இருந்த ஆட்டத்தை நான்கு ஓவர்களுக்கு 28 ரன்கள் என எளிமைப்படுத்தி விட்டார்.

- Advertisement -

மிகச் சிறப்பாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் இறுதியில் 19 பந்துகளில் நான்கு பவுண்டரி ஏழு சிக்ஸர்கள் உடன் 62 ரன்கள் குவித்தார். இவர் ஆட்டம் இழந்த பின்பு திடீரென நன்றாக சென்று கொண்டு இருந்த ஆட்டம் அப்படியே தடம் புரண்டது.

பந்தை சிக்ஸருக்கு அடித்து எதிர்பார்க்காத வகையில் ஹிட் விக்கெட் ஆகி பதோனி வெளியேறினார். அடுத்து உடனே மார்க் வுட் கிளம்பினார். கடைசி ஓவரில் ஐந்து ரன்கள் மட்டுமே தேவைப்பட, ஆட்டம் இரண்டு பந்துகளுக்கு ஒரு ரன் என மாறியது.

ஹர்சல் பட்டேலின் கடைசி ஓவரின் கடைசி பந்துக்கு முன் பந்தை சந்தித்த உனட்கட் தேவையில்லாமல் பந்தை தூக்கி அடித்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து ஒரு பந்துக்கு ஒரு ரன் தேவைப்பட்ட பொழுது, பந்து வீசுவதற்கு முன்பே வெளியே ஓடி ரவி பிஷ்னோய் தவறு செய்ய, அவரை ரன் அவுட் செய்ய முயற்சித்து ஹர்சல் படேல் தோற்றார். கடைசித் ப்ந்தை சந்தித்த ஆவேஷ் கான் பந்தை அடிக்காமல் விட்டு இந்த முனைக்கு ஓடி வர, தன் முனையில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் சரியாக பந்தை எறிந்து ரன் அவுட் செய்யாமல் தவறவிட, கடைசிப் பந்து வரை நீடித்த இந்த பரபரப்பான போட்டியில் லக்னோ அணி தனது மூன்றாவது வெற்றியை நான்காவது ஆட்டத்தில் பெற்றது!