“சொல்லி அடித்த கில்-லி!”.. நேற்று சொன்னதை இன்று செய்து காட்டிய சுப்மன் கில்!.. என்ன சொன்னார்?

0
1740
Gill

நடப்பு ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் சுற்றில் இந்தியா பாகிஸ்தான் மோதிய போட்டி மழையின் காரணமாக முடிவில்லாமல் டிரா ஆன காரணத்தினால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்!

அதே சமயத்தில் 2 அணி நிர்வாகங்களும் பெரிய அணிக்கு எதிராக தங்களுடைய பேட்டிங் மற்றும் பந்துவீச்சு எப்படி இருக்கிறது என்று பரிசோதிக்க முடியாமல் போனதற்காக மிகவும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -

குறிப்பாக இந்திய அணியில் முக்கிய வீரர்கள் பேட்ஸ்மேன் பவுலர் என்று காயத்திலிருந்து திரும்ப வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு சிறந்த போட்டி பயிற்சி கிடைக்க வேண்டும் என்றால் பெரிய அணிகளுடன் உலக கோப்பைக்கு முன்பாக விளையாடியாக வேண்டும்.

எனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகம் நடப்பு ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை அணிக்கு திரும்பிய தங்கள் வீரர்களுக்கான சிறந்த போட்டி பயிற்சியாக இருக்கும் என்று நம்பி இருந்தார்கள். தற்பொழுது இந்த நம்பிக்கையில் தான் மழை விளையாடி இருக்கிறது.

இந்த நிலையில் இன்று 24.1 ஓவர் மட்டும் பேட்டிங் செய்திருக்கும் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து மிகவும் அற்புதமான பேட்டிங் செயல்பாட்டை காட்டி இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இளம் வீரர் சுப்மன் கில் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் என்று சிறப்பான துவக்கத்தை தந்தார்கள். மேலும் இருவரும் அதிரடியாக விளையாடி அரை சதத்தையும் கடந்து ஆட்டம் இழந்தார்கள்.

நேற்று பத்திரிகையாளர்களை சுப்மன் கில் சந்தித்த பொழுது அவரிடம் இன்றைய போட்டிக்கான திட்டம் எப்படி என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கில் “எங்களுடைய பேட்டிங் திட்டம் என்பது பெரிதாக எதுவும் கிடையாது. துவக்க ஆட்டக்காரர்கள் நாங்கள் நிலைத்து நின்று விளையாடி, நல்ல துவக்கத்தை தரவேண்டும். பின்பு எங்கள் வீரர்கள் மற்றதை பார்த்துக் கொள்வார்கள். இதைத்தான் நாங்கள் எங்களுடைய திட்டமாக வைத்திருக்கிறோம்!” என்று கூறியிருந்தார்!

நேற்று அவர் சொன்னபடியே இன்று நல்ல துவக்கத்தை தருவதற்காக ஆபத்தான பந்துவீச்சாளரான ஷாகின் ஷா அப்ரிடியை தானே தாக்கி விளையாடி, ரன்கள் கொண்டு வந்து அசத்தினார். பவர் பிளேவில் அவரைச் சந்தித்த 12 பந்துகளில் 6 பவுண்டரிகள் நொறுக்கினார். இதனால் கேப்டன் பாபர் அசாம் தன்னுடைய பிரைம் பவுலருக்கு மூன்று ஓவர்களில் ஸ்பெல்லை நிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது!