வரலாறு படைத்தது UAE.. 2வது டி20-ல் நியூசிலாந்தை 15.4 ஓவரில் அசால்டாக அடித்து அபார வெற்றி.

0
11260
UAE

நியூசிலாந்து அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக யுனைடெட் அரபு எமிரேடுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

இந்தத் தொடரின் முதல் போட்டி துபாய் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அந்தப் போட்டியில் எளிதாக வெற்றி பெற வேண்டிய இடத்தில் இருந்த யுனைடெட் அரபு எமிரேடு, ஆட்டத்தை பேட்டிங்கில் முடிக்கும் அனுபவம் இல்லாத காரணமாக தோல்வி அடைந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த தொடரின் இரண்டாவது போட்டி துபாய் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான டாஸில் வென்ற யுனைடெட் அரபு எமிரேடு முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

பந்துவீச்சை தேர்வு செய்ததற்கு நியாயம் செய்யும் விதமாக மிகச்சிறப்பான பந்துவீச்சு ஒழுக்கத்தை மேற்கொண்டது. அந்த அணியின் துவக்க ஆட்டக்கார சாட் பவுஸ் மட்டுமே மேல் வரிசையில் 21 ரன்கள் எடுத்தார். டிம் ஷெப்பர்ட் 7, மிட்சல் சான்ட்னர் 1, டேன் கிளேவர் 0, மெக்கன்சி 9, ஜேம்ஸ் நீசம் 21, ரச்சின் ரவீந்தரா 2, கையில் ஜெமிஷன் 8, டிம் சவுதி 4 ரன்கள் எடுத்தார்கள்.

ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய மார்க் சாப்மேன் 46 பந்துகளில் 3 பவுண்டரி மூன்று சிக்ஸர்கள் உடன் 63 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய யுஏஇ அணிக்கு, கடந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடி அறிமுக போட்டியில் அரைசதம் அடித்த இந்திய வம்சாவளி ஆரியனாஸ் ஷர்மா இந்த முறை ரன் எடுக்காமல் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

ஆனால் கடந்த போட்டியில் ரன் எடுக்காமல் வெளியேறிய கேப்டன் முகமது வாசிம் இந்த முறை அபாரமாக விளையாடி 29 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 55 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து வந்த விருத்தியா அரவிந்த் 21 பந்தில் 25 ரன்கள் எடுத்தார்.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த ஆசிப் கான் மற்றும் பஸில் ஹமித் இருவரும் மேற்கொண்டு விக்கெட் விடாமல் பொறுப்புடன் விளையாடி 15.4 ஓவர்களில் இலக்கை எட்டி, யுஏஇ அணிக்கு வரலாற்றில் மிகப்பெரிய முதல் வெற்றியை பதிவு செய்தார்கள். இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்ற ஆசிப் கான் 29 பந்தில் 5 பவுண்டரி ஒரு சிக்சர் உடன் 48 ரன்கள், பஸ்ஸில் ஹமீத் 12 பந்தில் 12 ரன்கள் எடுத்தார்கள். தற்பொழுது தொடர் ஒன்றுக்கு ஒன்று என சமன் ஆகியுள்ளது.