“அவரது டெஸ்ட் வாழ்க்கை சுவாரஸ்யமானது! அவரது திறமைக்கேற்ற உச்சத்தை இன்னும் அவர் எட்டவில்லை” – இந்திய அணியின் முன்னணி வீரர் குறித்து புகழ்ந்த மார்க் வாஹ்!

0
532

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகின்ற வெள்ளிக்கிழமை டெல்லியில் நடைபெற இருக்கிறது . இந்தத் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருக்கிறது .

ஏற்கனவே தொடரின் முதல் போட்டியை இழந்துள்ள ஆஸ்திரேலிய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயமாக பதிலடி கொடுக்க வலுவான நிலையில் களம் இறங்கும் . இதற்காக இரண்டு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அபாரமாக விளையாடி சதம் அடித்தார் . இவர் டெஸ்ட் போட்டிகளில் அடிக்கும் ஒன்பதாவது சதம் இதுவாகும் . மேலும் ஒரு இந்திய கேப்டனாக கிரிக்கெட்டின் மூன்று வடிவ போட்டிகளிலும் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார் . இவரது அவ்வாற ஆட்டத்தினால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் மிகப்பெரிய ஸ்கோர் எட்ட காரணமாக அமைந்தது .

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் மார்க் வாஹ் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை வெகுவாக பாராட்டியுள்ளார் . இதுகுறித்து பேசியுள்ள அவர் ” ரோகித் சர்மா ஒரு கிளாஸ் ஆன வீரர் அவருடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை அவரது திறமைக்கேற்ப உயரத்தை இதுவரை எட்டவில்லை என்றாலும் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் மேட்ச் வின்னராக உருவாகிக் கொண்டு வருகிறார்”என்று குறிப்பிட்டார் .

மேலும் இதுபற்றி தொடர்ந்து பேசிய மார்க்வாஹ் “ரோகித் சர்மா மிகவும் எளிமையான பேட்டிங் தொழில்நுட்பத்தை கொண்டவர். எல்லா சிறந்த வீரர்களை போலவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க அவருக்கு சில காலங்கள் தேவைப்பட்டது . தற்போது டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்றவாறு தன்னுடைய ஆட்டத்தை ஒரு ஒழுங்கான முறையில் அவர் அமைத்திருக்கிறார்”என்று கூறினார்.

- Advertisement -

ரோகித் சர்மா பற்றி மேலும் அவர் கூறியது “அவர் எல்லா நிலைகளிலும் ஒரு கிளாஸ் பிளேயர். அவர் வெளிநாட்டில் நன்றாக விளையாடுகிறார், இந்திய நிலைமைகளுக்கு சரியான ஆட்டத்தை அவர் பெற்றுள்ளார். அவரிடம் எல்லா ஷாட்களை ஆடுவதற்கான ரேஞ்ச் இருக்கிறது . ஆட்டத்தை பற்றி ஆழமாக சிந்திக்கிறார் மேலும் பந்துகளை நன்றாக கவனித்து நேரம் எடுத்து ஆடுகிறார் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தனது ஆட்டத்தில் வேகத்தை குறைக்கவும் கூட்டவும் அவரால் முடிகிறது . இனிய ரோகித் சர்மாவை ஒரு நாள் போட்டிகளைப் போல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஒரு மேட்ச் வின்னர் ஆக பார்க்கலாம் எனக் கூறி முடித்தார் மார்க் வாஹ் .