“அவர் எங்களை நம்பறதுதான் எங்கள ஓட வைக்குது. அவர் மாதிரி ஒருத்தர பார்க்கவே முடியாது” – தோனி பற்றி கான்வே ருதுராஜ் உருக்கம்

0
2558
CSK

கடந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பாப் டு பிளிஸிசை வாங்காதது சென்னை ரசிகர்களைப் பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளாகியது.

அவரது இடத்தில் நியூசிலாந்து அணியின் இடதுகை துவக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வேவை அடிப்படை விலையான ஒரு கோடிக்கு வாங்கியது.

- Advertisement -

அந்த ஆண்டு ஏலத்தில் குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட மிக அதிக பயனுள்ள வீரர் இவர்தான். துவக்க ஆட்டக்காரர், இடது கை வீரர் மேலும் விக்கெட் கீப்பிங் செய்யக்கூடியவர். இது இல்லாமல் ஆசிய கண்டத்து வீரர்கள் போல சுழற்பந்து வீச்சை அற்புதமாக விளையாடக் கூடியவர்.

மேலும் ருதுராஜ் வரலாறு பற்றி நாம் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான். இன்று சென்னை அணிக்கு மிகவும் வெற்றிகரமான துவக்க ஆட்டக்காரர்களாக டெவோன் கான்வே மற்றும் ருதுராஜ் இருவரும், மைக்கேல் ஹசி மற்றும் விஜய் துவக்க ஜோடிக்கு பிறகு இருக்கிறார்கள்.

ஆனால் இவர்கள் சிறிது காலத்தில் அவர்களையும் தாண்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய வெற்றிகரமான துவக்க ஜோடியாக இருப்பார்கள். ஏனென்றால் குறைந்தது இவர்கள் அடுத்த மூன்று ஆண்டுகள் சேர்ந்து விளையாடப் போகிறார்கள்.

- Advertisement -

நேற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான முக்கிய போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக இவர்கள் இருவரும் சதத்திற்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து, இருவருமே அரைசதங்களைக் கடந்து அற்புதமான துவக்கத்தைத் தந்தார்கள். இதுவே சென்னையின் வெற்றியை மிகமிக எளிதாக்கி ப்ளே ஆப் சுற்றுக்குள் கொண்டு சென்றது.

வெற்றிக்குப் பின் இருவரும் பேசும் பொழுது, மகேந்திர சிங் தோனி குறித்து டெவோன் கான்வே கூறுகையில் “எங்கள் அணியில் மகி பாய் இருப்பதற்கு நாங்கள் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர்கள். அவர் மிகவும் மதிக்கப்படும் வீரராக இருக்கிறார். அவர் நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். இப்படி ஒரு சாதனையாளர் ஒரு வீரரின் மீது நம்பிக்கை வைக்கும் பொழுது அது அந்த வீரரைச் சிறப்பாகச் செயல்பட வைக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!

மகேந்திர சிங் தோனி குறித்து ருதுராஜ் கூறுகையில் ” மகி பாயின் தலைமையின் கீழ் விளையாடுவதற்கு நான் மிகவும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். அவர் மிகவும் பணிவானவர். மற்றவர்கள் உரையாடுவதற்கு எப்பொழுதும் திறந்த மனதுடன் இருப்பவர். அவர் எப்பொழுதும் உதவி செய்வார். அவரது ஆதரவு வார்த்தைகள் எனக்கு மிகவும் நம்பிக்கையை அளித்து இருக்கின்றன!” என்று கூறியிருக்கிறார்!