அதிவேக நோர்கியா பெர்குசன அடிப்ப.. ஆனா எங்க ஆள அடிக்க முடியாது.. ஏன் தெரியுமா?.. – கில்லுக்கு விளக்கிய சல்மான் பட்

0
4560
Butt

இந்தியாவில் நடக்க இருக்கும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இடதுகை பேட்ஸ்மேன் ஷிகர் தவான் ஆட்டத்தை துவங்குவார் என்று பலரும் கடந்த வருடம் வரை நம்பி இருந்தார்கள்!

ஆனால் ராகுல் டிராவிட்-ரோஹித் சர்மா கூட்டணி வேறுவிதமாக யோசித்து, இளம் வலது கை பேட்ஸ்மேன் சுப்மன் கில்லை, ஷிகர் தவான் இடத்துக்கு கொண்டு வந்து ஆச்சரியப்படுத்தியது. இது யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவாகவே இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் அனுபவ வீரர் ஷிகர் தவான் இடத்துக்கு வந்த சுப்மன் கில், தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளை மிகச் சிறப்பாக பயன்படுத்தி ரன்களை குவித்து காட்டினார். இந்தியாவில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரட்டை சதம் விளாசி அமர்க்களப்படுத்தினார்.

இதற்கு முன்னதாக பங்களாதேஷ் சுற்றுப்பயணம் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இஷான் கிஷான் இரட்டை சதம் துவக்க வீரராக அடித்திருந்தார். அடுத்த சில வாரங்களில் துவக்க வீரராக கில் இரட்டை சதம் அடித்து, தன்னை இந்திய அணியின் ஒருநாள் கிரிக்கெட் துவக்க ஆட்டக்காரராக அறிவித்தார்.

இப்படி சிறப்பாக சென்று கொண்டிருந்த அவரது பேட்டிங் ஃபார்ம் திடீரென்று வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் சரிந்தது. அந்த சுற்றுப்பயணத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் இவரின் தரத்துக்கு ஏற்ற ரன்கள் வெளிவரவில்லை. உலகக்கோப்பை நெருங்கிக் கொண்டிருப்பதால், இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு இது புதிய தலைவலியாக மாறியது.

- Advertisement -

இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 32 பந்துகளை எதிர்கொண்டு, ஒரு பவுண்டரி மட்டுமே அடித்து, 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். மேலும் அவர் ஹாரிஸ் ரவுஃப் பந்தில் மிகவும் சுமாரான ஒரு ஷாட் விளையாடி கிளீன் போல்ட் ஆனார். அவரது தடுமாற்றம் மிக வெளிப்படையாகவே தெரிந்தது.

இந்த நிலையில் இவரது பேட்டிங் குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் “சுப்மன் கில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களைப் போல வேகமாக வீசக்கூடிய, தென் ஆப்பிரிக்காவின் நோர்கியா மற்றும் ரபடா என இது போன்ற அதிவேகமான பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு மிகச் சிறப்பாகவே விளையாடியிருக்கிறார்.

ஆனால் ஷாஹின் ஷா அப்ரிடி பந்துவீச்சு வெறும் வேகம் மட்டுமே கொண்டது கிடையாது. அவரது பந்துவீச்சில் சிறப்பான லைன் அண்ட் லென்த் இருக்கிறது. மேலும் அவருடைய பந்து லேட்டாக ஸ்விங் ஆகும். அவருடைய இந்த திறமைதான் கில்லை தடுமாற வைத்தது. ஷாஹினை விட அதிவேகமாக வீசக்கூடிய பெர்குஷனை எதிர்கொண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக இரட்டை சதம் கில் அடித்தார். நோர்கியாவை பிரண்ட்புட்டில் விளாசி தள்ளினார்.

ஷாஹின் பந்துவீச்சில் இருக்கக்கூடிய முக்கியமான விஷயம் அவரது பந்து லேட்டாக ஸ்விங் ஆகும். இது பெரும்பாலான பேட்டர்களை தொந்தரவு செய்கிறது. கில் புதியவர் ஆனால் ரோகித் சர்மா அனுபவ பேட்ஸ்மேன். அவருக்குமே இது பெரிய பிரச்சனையாக இருந்தது. விராட் கோலியும் வெளியேறினார். டேவிட் வார்னரும் இவரிடம் இதே போல் சிக்கலை எதிர்கொண்டார்!” என்று கூறியிருக்கிறார்!