ஆஸ்திரேலியா டெஸ்ட் சீரியஸ்க்கு ரிஷப் பண்ட் இடத்துக்கு இவர்தான் சரியானவர் – முன்னாள் தேர்வு குழு தலைவர் பரபரப்பு கருத்து!

0
1047
Rishab Pant

இந்திய டெஸ்ட் அணியின் நிரந்தர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. விக்கெட் கீப்பிங்கில் அவர் மிகவும் சிறப்பாகச் செயல்படுவதை தாண்டி, டெஸ்ட் பேட்டிங்கில் அவர் ஒரு புது தாக்கத்தை உருவாக்கி இருக்கிறார்.

இன்று இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக பேட்டிங் செய்கிறது. ஆனால் சமீப காலத்தில் அதற்கு முன்மாதிரியாக இருந்தவர் ரிஷப் பண்ட்தான். டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் அவர் அதிரடியாக அணுகிய விதத்தில் இந்தியா மிகப்பெரிய வெற்றிகளை பெற்றுள்ளது.

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தகுதிக்கு பிப்ரவரி மாதத்தில் உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடும் டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானது ஆகும். ஆனால் நேற்று விபத்தில் ரிஷப் பண்ட் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவரால் இந்த முக்கியமான டெஸ்ட் தொடரில் விளையாட முடியாது.

எனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான முக்கியத்துவம் வாய்ந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் இடத்தில் யார் சரியாக வருவார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான சபா கரீம் சில முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறும் பொழுது
“ரிஷப் பண்ட் அணியில் இருந்த பொழுது அவரால் நாம் வெற்றிகளை டெஸ்டில் பெற்றுள்ளோம். ஏனென்றால் அவர் மேட்ச் வின்னிங் நாக்-கை விளையாடியதோடு வேகமாகவும் விளையாடி ரன் சேர்த்தார். இது எதிராளிக்கு அழுத்தத்தை கொடுத்தது மேலும் இந்திய பந்துவீச்சாளர்கள் எதிரணியின் 20 விக்கட்டுகளை வீழ்த்த நேரத்தையும் கொடுத்தது ” என்று கூறியுள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் கே எஸ் பரத்தை டெஸ்ட் விக்கெட் கீப்பராக இந்திய அணி நிர்வாகம் உருவாக்கி வருவது உண்மைதான். ஆனால் அவர் ரிஷப் பண்ட் அணியில் செய்து வந்ததை செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்…

யார் சரியாக இருப்பார்கள்? என்று கூறும்பொழுது ” எனது தேர்வு இசான் கிஷான் தான். அவர் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது இல்லை. ஆனால் சமீபகாலமாக ஜார்கண்ட் அணிக்காக சிவப்பு பந்து போட்டிகளில் அதிரடியாக நன்றாக விளையாடி வருகிறார். அதே சமயத்தில் சஞ்சு சாம்சன் இருக்கிறார். விக்கெட் கீப்பிங் மற்றும் ரிஷப் பண்ட் விளையாடிய முறையில் விளையாட யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று பார்க்க வேண்டும். இஷான் கிஷான் இதற்கு சரியாக இருப்பார் என்பது எனது கருத்து” என்று தெரிவித்துள்ளார்!