39 பந்துல ஒருத்தன் 81 அடிக்கிறான்னா… ஈஸியா 180 சேஸ் பண்ண முடியாதான்னு தான் இறங்குனோம் – பலே பாண்டியா பேட்டி!

0
497

கடைசியாக இவ்வளவு கிளியராக ஒருத்தர் பேட்டிங் செய்ததைப் பார்த்து நீண்ட நாட்கள் ஆகியது. அவர் அப்படி அடிக்கும் பொழுது 180 ரன்களை சேஸ் செய்ய முடியும் என்று இறங்கினோம் என்றார் ஹர்திக் பாண்டியா.

கொல்கத்தா மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் துவக்க வீரர் குர்பாஸ் 39 பந்துகளில் ஏழு சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் உட்பட 81 ரன்கள் அடித்தார். கீழ்வரிசையில் ரஸ்ஸல் 19 பந்துகளில் 34 ரன்கள் அடிக்க, நல்ல துவக்கம் கிடைத்தும் அதை பெரிய ஸ்கோர் ஆக எடுத்துச் செல்ல முடியாமல் ஏழு விக்கெடுகள் இழப்பிற்கு 179 ரன்கள் மட்டுமே அடித்தது.

- Advertisement -

இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணிக்கு கில் 49 ரன்கள் அடித்து நல்ல துவக்கம் அமைத்துக் கொடுத்தார். ஹர்திக் பாண்டியா 26 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். நான்காவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த விஜய் சங்கர் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் சேர்ந்து 87 ரன்கள் விலாசி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

இதில் விஜய் சங்கர் 24 பந்துகளில் 51 ரன்கள், டேவிட் மில்லர் 18 பந்துகளின் 32 ரன்கள் அடித்து இதுவரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர். போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த வெற்றி பெற்ற அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில்,

“குர்பாஸ் மிகத் தெளிவாக நேர்த்தியுடன் பேட்டிங் செய்து வந்தார். அப்படிப்பட்ட தெளிவான பேட்டிங்கை பார்த்து நீண்ட காலம் ஆகிவிட்டது. மீண்டும் எங்களை ஆட்டத்திற்குள் கொண்டு வந்தது நூர் அகமது மற்றும் ஜோஷ் லிட்டில் இருவரும் தான்.

- Advertisement -

39 பந்துகளில் 81 ரன்கள் ஒருவர் அடிக்கிறார் என்றால், 180 ரன்கள் இலக்கை எங்களால் சேஸ் செய்ய முடியும் என்று நம்பி இறங்கினோம். மேலும் நல்ல கிரிக்கெட்டை வெளிப்படுத்தினால் போதும் பேட்டிங்கில் பொறுமையுடன் விளையாடும் பொழுது ஆட்டத்தை எடுத்துச் செல்ல முடியும் என்றும் நம்பிக்கையே இருந்தது.

போட்டியில் ஒவ்வொருவரும் பங்களிப்பை கொடுக்க வேண்டும். மேலும் எந்த பொசிஷனிலும் விளையாடுவதற்கு தயாராக இருக்க வேண்டும். நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினால் போதும். வெற்றி அல்லது தோல்வி என்பது முக்கியம் அல்ல என்பதை கருதுவேன். நல்ல கிரிக்கெட்டை ஆடினாலே போட்டியை வெல்ல முடியும்.

நன்கு உடல்தகுதியுடன் இருக்கிறார். தொடரில் செல்ல செல்ல விஜய் சங்கரிடமிருந்து இது போன்ற சிறப்பான ஆட்டத்தை பார்ப்பீர்கள். அவரைப் போன்ற வீரர் நல்ல இடத்திற்கு செல்ல வேண்டும். ஆடவேண்டும் என்று விரும்புகிறேன்.” என்றார்.