3 வருஷமா காத்திருப்பவருக்கு வாய்ப்பா? முதல்முறை டெஸ்ட் டீமுக்குள் வந்திருப்பவருக்கு வாய்ப்பா? – இஷான் கிஷன், கேஎஸ் பரத் யாருக்கு பிளேயிங் லெவனில் இடம்? – ரிப்போர்ட்!

0
835

இஷான் கிஷன், பரத் இருவரில் யாருக்கு பிளேயிங் லெவனில் இடம்கொடுக்கப்பட வேண்டும் என்று கருத்துக்கள் நிலவி வருகின்றன. யார் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட் கடந்த டிசம்பர் மாதம் கார் விபத்து ஏற்பட்டு தீவிர சிகிச்சைகள் பெற்று வருவதால், சுமார் 18 மாதங்கள் சர்வதேச போட்டிகளில் அவரால் விளையாட முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

- Advertisement -

இதனை அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இஷான் கிஷன் உள்ளே எடுத்துவரப்பட்டிருக்கிறார். அத்துடன் சுமார் மூன்று வருடங்கள் இந்திய அணியுடன் இரண்டாம் கட்ட கீப்பராக பயணித்து வரும் கேஎஸ் பரத் இருக்கிறார்.

இருவரில் யாருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து விவாதங்கள் நிலவி வருகின்றன. மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட் போன்று தாக்கம் ஏற்படுத்தக்கூடிய மற்றும் இடது கை பேட்ஸ்மனாக இசான் கிஷன் இருக்கிறார். அவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என்று சிலர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

கே.எஸ். பரத் மிகச் சிறந்த கீப்பர் மற்றும் கீழ் வரிசையில் நன்றாக பேட்டிங்கில் செய்யக்கூடியவர் உள்ளூர் போட்டிகளில் நிறைய விளையாடியிருக்கிறார். இந்திய மைதானங்கள் பற்றி நன்கு தெரியும் ஆகையால் அவருக்கு கொடுக்க வேண்டும் என்றும் கருத்துக்கள் நிலவி வருகின்றன.

- Advertisement -

“பரத் நிறைய உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை கொண்டிருக்கிறார். கிடைத்த இரண்டு மூன்று வாய்ப்புகளில் நன்றாகவும் செயல்பட்டு இருக்கிறார். சகா, பண்ட் ஆகியோருக்கு அடுத்தபடியாக பரத் இருக்கிறார். தொடர்ந்து இந்திய அணியுடன் பயணித்து வருகிறார். ஆகையால் பரத் பிளேயிங் லெவனில் இருப்பது சரியாக இருக்கும்.” என்று முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் பேசினார்.

2021 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் சகாவிற்கு கழுத்துப்பகுதியில் சுளுக்கு ஏற்பட்டு வெளியில் அமர்த்தப்பட்டு இருந்தார் அப்போது சப்ஸ்டிட்யூட் ஆக உள்ளே வந்த பரத் முக்கியமான கேட்ச்களை எடுத்தார். மிகவும் கீழே வந்த கேட்ச்களை லாவகமாக பிடித்து ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பியது குறிப்பிடத்தக்கது.

இதை குறிப்பிட்டு பேசிய எம் எஸ் கே பிரசாத், “இந்திய அணியில் ஜடேஜா, அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் போன்ற மிகச்சிறந்த சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு கைதேர்ந்த கீப்பர் ஒருவர் தேவை. குறிப்பாக இக்கட்டான கேட்ச்களை எடுக்கக்கூடிய ஒருத்தர் தேவை. இஷான் கிஷன் நிறைய தவறுகள் செய்திருக்கிறார். லிமிடெட் ஓவர் போட்டிகளில் அதை பார்க்க முடிந்தது. ஆகையால் முதல் இரண்டு போட்டிகளில் பரத்-க்கு வாய்ப்புகள் கொடுத்து பார்க்க வேண்டும்.” என்றார்