பெண்கள் ஐபிஎல்.. சிஎஸ்கே டீம் இல்லாத காரணம் என்ன?.. வெளியான உண்மையான காரணம்

0
5141

ஆண்களுக்கான ஐபிஎல் தொடரைப் போன்றே பெண்களுக்கான ஐபிஎல் தொடரானது கடந்த வருடம் மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. இதில் ஐந்து ஐபிஎல் அணிகள் கலந்து கொண்டன. ஆனால் சென்னைக்கு மட்டும் ஆடவர் அணி போன்று மகளிர் அணி இல்லை என்ற வருத்தம் ரசிகர்களிடையே காணப்படுகிறது.

மகளிர் ஐபிஎல் தொடரில் மும்பை, டெல்லி, குஜராத், உத்தர பிரதேசம் மற்றும் பெங்களூர் என ஐந்து ஐபிஎல் அணிகள் உள்ளன. இதுவும் ஆடவர் ஐபிஎல் தொடரைப் போன்றே இந்திய வீராங்கனைகள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகளும் கலந்து கொள்கின்றனர். இது மக்களிடையே தற்போது பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

- Advertisement -

மகளிர்க்கான உள்நாட்டுத் தொடர் கிரிக்கெட் போட்டிகள் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் பிக் பாஸ் என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அதனைத் தொடர்ந்து இந்தியாவும் மகளிருக்கான பிரீமியர் லீக் போட்டிகள் கடந்த வருடம் தொடங்கியது. இந்தத் தொடரில் மும்பை அணி கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றது.

முதலில் ஆண்கள் ஐபிஎல் தொடரிலும் எட்டு அணிகள் மட்டுமே பங்கேற்றன. இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு மேலும் இரண்டு அணிகள் விரிவுபடுத்தப்பட்டு தற்போது பத்து அணிகள் விளையாடுகின்றன.

அதுபோலவே பெண்கள் ஐபிஎல் தொடரிலும் மக்களின் வரவேற்பை பொறுத்து அணிகள் விரிவுபடுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இதன் பிரான்சிஸ் உரிமையாளர்களான இந்தியா சிமெண்ட்ஸ் தென்னாப்பிரிக்காவிலும் இதே போன்று பிரீமியர் லீக் தொடங்கப்பட்டு ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை வாங்கியதன் மூலம் தென்னாப்பிரிக்காவில் தனது ரசிகர் பட்டாளத்தை விரிவுபடுத்தியது.

- Advertisement -

இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் மகளிர் பிரீமியர் லீக்கின் தொடக்கப் பதிப்பை பிசிசிஐ அறிவித்தபோது, ​​சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளர்களிடம் ரசிகர்கள் அதிக நம்பிக்கை வைத்திருந்தனர். மகளிர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையை ஏலம் எடுக்கும் என கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்தது. ஆனால் இந்த முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்திற்கான அழைப்பிதழை வாங்கவில்லை.

இதற்கு வேறு சில காரணங்கள் கூட இருக்கலாம் என்று கிரிக்பஸ் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து சிஎஸ்கேவின் முக்கிய அதிகாரி கருத்து தெரிவிக்கையில் ” சிஎஸ்கே பெண்கள் ஐபிஎலில் அணியை வாங்காதது ஒரு வணிகரீதியான முடிவு ” என்று தெரிவித்தார். ஆனால் பிற்காலங்களில் சிஎஸ்கே அணி ஒரு அணியை வாங்கும் என்று உறுதியாகத் தெரிகிறது. இதற்கு “சென்னை சூப்பர் குயின்ஸ்” என்று கூட ரசிகர்கள் பெயர் வைத்து விட்டனர். சிஎஸ்கே ஒரு புதிய அணியை வாங்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மகளிர் பிரீமியர் லீக் பொருத்தவரை அதன் ஐந்து அணி உரிமையாளர்களும் அதானி குழுமம், காப்ரி குளோபல், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகியோர் ஆகும்.