கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

தமிழக வீரர் நடராஜன் தற்போது எங்கே.?.. இந்திய டி20 உலக கோப்பை அணியில் வாய்ப்பு இருக்கா… முழு விவரம்

சின்னப்பம்பட்டி டூ சிட்னி.. தமிழ்நாடு அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான நடராஜனின் கதையை ஒரே வரியில் சொல்லிவிடலாம். இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனாலும் ஒரே ஆளாக தமிழ்நாட்டின் அடையாளத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் நிரந்தரமாக பதித்தார்.

- Advertisement -

அதன்பின் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க முடியவில்லை என்றாலும், ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக முக்கிய வீரராக இருந்து வருகிறார். இதுவரை 47 போட்டிகளில் விளையாடியுள்ள நடராஜன் 48 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அதேபோல் டெத் ஓவர்களில் யார்க்கர்களை வீசுவதில் வல்லராக இருக்கிறார்.

டிஎன்பிஎல், ஐபிஎல் என்று வலம் வந்த நடராஜன், அண்மை காலமாக டிஎன்பிஎல் தொடரில் அசத்தி வருகிறார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடரில் களமிறங்கிய நடராஜன், தமிழ்நாடு அணி அரையிறுதிக்கு முன்னேற முக்கிய காரணமாக அமைந்தார். அதேபோல் தற்போது ரஞ்சி டிராபி தொடரில் தமிழ்நாடு அணிக்காக விளையாட நடராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முதல் சில போட்டிகளில் களமிறங்கவில்லை என்றாலும், நீண்ட தொடர் என்பதால் அடுத்தடுத்த போட்டிகளில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனிடையே தமிழக ரசிகர்கள் மத்தியில் டி20 உலகக்கோப்பை தொடர்பான விவாதம் தொடங்கியுள்ளது. ஏற்கனவே டி20 அணியில் வாஷிங்டன் சுந்தர் இருந்து வரும் சூழலில், இடதுகை வேகப்பந்துவீச்சாளரான நடராஜன் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

ஏனென்றால் 2021 டி20 உலகக்கோப்பை தொடரிலேயே காயம் காரணமாக மட்டுமே நடராஜன் தேர்வு செய்யப்படவில்லை. அப்போது கேப்டனாக இருந்த விராட் கோலி, ஆஸ்திரேலியா டி20 தொடரில் நடராஜன் பந்துவீசியதை பார்த்துவிட்டு நடராஜனை தேர்வு செய்ய தீவிரமாக இருந்தார். ஆனால் நடராஜன் வாழ்க்கையில் காயம் பெரும் பிரச்சனையாக மாறியது.

இந்த நிலையில் மீண்டும் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் நடராஜன் விளையாட வாய்ப்புள்ள என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. நடராஜனுக்கு பதிலாக ஏற்கனவே அர்ஷ்தீப் சிங் இடதுகை வேகப்பந்துவீச்சாளராக இந்திய அணியில் இருக்கிறார். இதனால் நடராஜன் மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க வேண்டுமென்றால், இந்தியாவையே திரும்பி பார்க்க கூடிய ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

அதற்கு நடராஜனுக்கு 2 வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. தற்போது நடக்கும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடார் மற்றும் அதனை தொடர்ந்து நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் நடராஜன் இந்திய அணிக்கு மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -
Published by

Recent Posts