ஐபிஎல் தொடரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இம்பேக்ட் பிளேயர் விதி கொண்டுவரப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விதியை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளும் அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இருக்கிறது. அதேசமயத்தில் சிஎஸ்கே அணி இம்பேக்ட் பிளேயரை சரிவர பயன்படுத்திக் கொள்வது இல்லை.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யும்பொழுது, தங்களுக்குத் தேவையான எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை முதலில் பிளேயிங் லெவனில் வைத்துக் கொள்ளாது. தங்களிடம் இருக்கும் முதல் ஆறு பேட்ஸ்மேன்களை வைத்து 20 ஓவர் களை விளையாட முடிகிறதா? என்று பார்க்கும்.
ஒரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்து இருபது ஓவர்களையும் ஆறு பேட்ஸ்மேன்களை வைத்து ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிவிட்டால், வெளிநாட்டு பேட்ஸ்மேன் ரோமன் பவலுக்கு பதிலாக, வெளிநாட்டு வேகப் பந்துவீச்சாளர் பர்கரை பந்துவீச்சுக்கு கொண்டு வந்து விடும். இதனால் அவர்களது பவுலிங் யூனிட் வலிமையாக மாறும்.
தற்பொழுது சிஎஸ்கே அணியில் கூடுதல் பேட்ஸ்மேன்களாக ஆரம்பக் கட்டத்தில் இந்திய வீரர் சமீர் ரிஸ்வி, வெளிநாட்டு வீரர் டேரில் மிட்சல் இருவரும் இருந்தார்கள். சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்யும்பொழுது, இந்த இருவரையுமே பிளேயிங் லெவனில் வைத்துக் கொள்ளும். இம்பேக்ட் பிளேயராக மதிஷா பதிரனாவை பந்துவீச்சு கொண்டு வரும்.
அதே சமயத்தில் இந்த இரண்டு பேட்ஸ்மேன்களில் ஒருவரை இம்பேக்ட் பிளேயர்காக வெளியில் வைத்துக் கொண்டு, 20 ஓவர்களையும் தங்களிடம் இருக்கும் பேட்ஸ்மேன்களை வைத்து விளையாட முடிந்தால், அடுத்து பந்துவீச்சுக்கு செல்லும் பொழுது, ஒரு கூடுதல் பந்துவீச்சாளரை இம்பாக்ட் பிளேயராக எடுத்துக் கொள்ள முடியும். இம்பேக்ட் பிளேயராக நான்கு வீரர்களை வெளியில் வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நாளை சிஎஸ்கே அதிரடியான உத்தேச பிளேயிங் XI.. லக்னோவுக்கு பதிலடி தர புது மாற்றங்களுடன் மாஸ்டர் பிளான்
இந்த வகையில் சமீர் ரிஸ்வியை இம்பேக்ட் பிளேயராக முதலில் பேட்டிங் செய்யும்பொழுது வெளியில் வைத்தால், அவர் பேட்டிங் செய்ய தேவைப்படாத பொழுது, ஒரு இந்திய பந்துவீச்சாளரை உள்ளே கொண்டுவர முடியும். இதே போல் டேரில் மிட்சலை வெளியில் வைக்கும் பொழுது, மிட்சல் சான்ட்னர் அல்லது மதிஷா தீக்சனா போன்ற வெளிநாட்டு பந்துவீச்சாளர்களையும் உள்ளே கொண்டு வரலாம். ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் போல, சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் புத்திசாலித்தனமாக செயல்படுவாரா? என்று பார்க்க வேண்டும்