ஐ.பி.எல் ஏலத்தில் தமிழக அதிரடி வீரர் ஷாருக் கானுக்கு குறைந்த அடிப்படை விலை அளித்துள்ளதற்கு காரணம் இதுதான்

0
1351
Sharukh Khan 2022 IPL Auction

இந்தியா தென் ஆப்பிரிக்காவில் ஒரு நாள் தொடரில் விளையாடி வந்தாலும் அந்தத் தொடரை ஏற்கனவே இழந்து விட்டது. மிகவும் எளிதாக வென்று விடும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் பவுமா அளவிலான அணியிடம் இந்திய அணி 2 போட்டிகளிலும் வீழ்ந்து உள்ளது. இதனால் ரசிகர்களின் பார்வை இந்த ஒருநாள் தொடரில் இருந்து ஐபிஎல் பக்கம் தற்போது திரும்பியுள்ளது. ஏற்கனவே இரண்டாவது ஒருநாள் போட்டி முடிந்த உடனேயே 20 அணிகளான லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் தாங்கள் எந்த 3 வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளோம் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தன.

மேலும் இன்று எந்தெந்த வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க போகிறார்கள் என்றும் அந்த வீரர்களின் குறைந்தபட்ச விலை எவ்வளவு என்ற தகவலும் வெளியானது. மிகவும் முக்கியமான வீரர்கள் எல்லாம் தங்கள் குறைந்தபட்ச விலையை இரண்டு கோடியாக வைத்துள்ளனர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தமிழகத்தைச் சேர்ந்த அதிரடி வீரரான ஷாருக்கான் தன்னுடைய குறைந்தபட்ச விலையை 20 லட்சமாக வைத்துள்ளார். எப்படியும் பல கோடிகளுக்கு ஏலம் செல்ல இருக்கும் ஷாருக்கான், தன்னுடைய விலையை இரண்டு கோடியாக வைக்காமல் 20 லட்சமாக வைத்து இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

- Advertisement -

இத்தனைக்கும் கடந்த ஆண்டே 5.6 கோடிக்கு ஏலம் சென்றார் சாருக் கான். ஆனால் தற்போது ஏன் அவர் தன்னுடைய விலையை 20 லட்சமாக நிர்ணயம் செய்து உள்ளார் என்ற கேள்விக்கு பதில் தெரிந்துள்ளது. இதுவரை ஷாருக்கான் இந்திய அணிக்காக ஒரு போட்டி கூட விளையாடாத காரணத்தினால் அவர் தன்னுடைய குறைந்தபட்ச விலையை அவருக்கு ஏற்றது போல மாற்ற முடியாது என்ற ஐபிஎல் விதிமுறை தான் இதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. இந்திய அணிக்கு விளையாடாத காரணத்தினால் ஷாருக்கானால் தன்னுடைய விலையை அதிகமாக நிர்ணயிக்க முடியவில்லை.

இதே போன்று மற்றொரு சிறந்த வீரராக ஆவேஷ் கானும் தன்னுடைய விலையை குறைந்தபட்ச 20 லட்சமாகத்தான் வைத்துள்ளார். இருக்கும் இந்திய அணிக்கு விளையாடாது தான் பிரச்சனை. கடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இதுவரை இந்திய அணி ஸ்குவாடில் எடுத்த போதும் விளையாட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதன் காரணமாக இவராலும் இவர் விரும்பிய தொகையை தன்னுடைய குறைந்தபட்ச விலையாக நிர்ணயிக்க முடியாமல் போயுள்ளது. மிகவும் அதிரடியாக கடைசி நேரங்களில் ரன்கள் சேர்க்கும் திறன் கொண்ட ஷாருக்கான் எத்தனை கோடிகளுக்கு ஏலம் செல்லப்போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.