ஆட்டநாயகன் விருதுக்கு பின் பேசாமல் சென்ற சிஎஸ்கே முஸ்தபிசுர் ரஹ்மான் – வெளியான உண்மை காரணம்

0
72336

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 17 ஆவது சீசன் தற்போது தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் ருத்ராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டூ ப்ளஸ்சிஸ் தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதினார்.

சென்னை அணியைப் பொறுத்தவரை இந்த சீசன் தொடங்கப்படுவதற்கு முன்னர் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் வலுவாகவே இருந்தது. ஆனால் சில முன்னணி வீரர்களின் காயம் காரணமாக சென்னை அணிக்கு சற்று பிரச்சினை இருப்பது போல் தோன்றினாலும் சரியான பிளேயிங் லெவலுடன் களமிறங்கியது.

- Advertisement -

கடந்த சீசனின் மிகச் சிறப்பாக பந்து வீசிய இலங்கை அணியைச் சேர்ந்த மதிசா பதிரானா காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடாத நிலையில், வங்காளதேச அணையைச் சேர்ந்த முஸ்தபிகுர் ரகுமான் களம் இறங்கினார். இவருக்கு ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருந்ததால், இவரின் மேல் நம்பிக்கை வைத்து சென்னை அணி நிர்வாகம் வாய்ப்புக் கொடுத்தது.

முதலில் ஆடிய பெங்களூர் அணி விராட் கோலி மற்றும் பாப் டூப்ளசிஸ் கூட்டணி பெங்களூரின் ஸ்கோரை நன்றாகவே உயர்த்தினர். பவர்பிளே வரை மிக நன்றாக சென்று கொண்டிருந்த பெங்களூர் அணிக்கு முக்கிய இரண்டு தொடக்க விக்கெட்டுகளை முஸ்தபிசுர் ரஹ்மான் வீழ்த்தினார். அதன் பிறகு வந்த ரஜத் பட்டிதார் முதல் பந்திலையே முஸ்தகுர் ரஹ்மானிடம் ஆட்டம் இழக்க, ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீனும் அவரது பந்து வீச்சிலேயே வெளியேறினார்.

இப்படி பெங்களூர் அணியின் மிக முக்கிய நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு சென்னை அணி வெற்றி பெற காரணமாகவும் அமைந்தார். நான்கு ஓவர்கள் பந்துவீசி 29 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

- Advertisement -

ஆட்டநாயகன் விருது பெற்ற எந்த ஒரு வீரரும் பொதுவாக போட்டி முடிந்த பின் பேசுவது வழக்கம். ஆனால் ஆட்டநாயகன் விருதை வென்ற முஸ்தபிசுர் ரஹ்மான் பேசவில்லை. காரணம் வர்ணனையாளர் ரவி சாஸ்திரிக்கோ அல்லது சென்னை அணியின் மற்ற வீரர்களுக்கோ பெங்காலி மொழி சரளமாக தெரியாது. பெங்காலி மொழி வசதியாக இருக்கும் முஸ்தபிகுர் ரஹ்மானுக்கு மற்ற மொழிகள் அவ்வளவாக பேச வராது.

இதையும் படிங்க: தம்பி எல்லை மீறி ஓவரா பண்ற.. ஹர்சித் ராணாவுக்கு அதிரடியாக தண்டனை கொடுத்த ஐபிஎல் குழு

மகேந்திர சிங் தோனிக்கு பெங்காலி மொழி தெரியும் என்றாலும், அவரால் மொழிபெயர்க்கும் அளவிற்கு தெரிய வாய்ப்பில்லை என்ற காரணத்தினால் ஆட்டநாயகன் விருது பெற்ற பிறகு போஸ்ட் மேட்ச் ப்ரசெண்டேஷனில் அவர் பேசவில்லை. எனவே தகவல் தொடர்பு இடைவெளியே அவர் பேசாமல் போனதற்கு காரணமாக கூறப்படுகிறது.