2021 – 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் அனைத்து அணிகளின் தற்போதைய நிலை – கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது இங்கிலாந்து

0
1627
Joe Root World Test Championship

ஐசிசி நிர்வாகம் டெஸ்ட் போட்டிகளுக்கென தனியாக ஒரு உலக சாம்பியன்ஷிப் தொடரை ஆரம்பிக்க முடிவு செய்து, 2019 முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வெற்றிகரமாகவும் நிகழ்த்தியது. முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இறுதியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

தற்பொழுது 2021 முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று கொண்டிருக்கிறது. லீக் சுற்று போட்டிகளில் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதலிரண்டு இடங்களை தக்க வைக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இறுதிப்போட்டி 2023 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

2021-2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் தற்போதைய புள்ளி பட்டியல்

புள்ளி பட்டியிலில் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் 36 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது. இலங்கை அணி இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளுடன் 24 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த இரண்டு அணிகளை தொடர்ந்து பாகிஸ்தான் அணி 36 புள்ளிகளை பெற்று 3-வது இடத்திலும், இந்திய அணி 53 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்திலும் உள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி 12 புள்ளிகளுடன் ( 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வி ) 5-வது இடத்திலும், வங்கதேச அணி 12 புள்ளிகளைப் பெற்று ( 3 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மற்றும் 2 தோல்வி )6-வது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணி 12 புள்ளிகளை பெற்று ( 4 போட்டிகளில் விளையாடி 3 தோல்வி மற்றுமொரு வெற்றி ) 7வது இடத்திலும் உள்ளது. நியூசிலாந்து அணி 3 போட்டிகளில் விளையாடி 2 தோல்வி மற்றுமொரு டிரா என 4 புள்ளிகளை பெற்று 8ஆவது இடத்தில் உள்ளது.

கடைசி இடத்தில் பரிதாப நிலையில் இருக்கும் இங்கிலாந்து அணி

2021-23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் லீக் சுற்று போட்டியை இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு எதிராகவே தொடங்கியது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மொத்தம் நான்கு போட்டிகள் கடந்த ஆண்டு விளையாடப்பட்டது. நான்கு போட்டிகளில் இந்திய அணியிடம் 2 போட்டிகளில் தோல்வி, ஒரு போட்டியில் வெற்றி மற்றும் ஒரு போட்டியை சமன் செய்தது.பின்னர் 2021 டிசம்பர் முதல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து விளையாடி வருகிறது.

- Advertisement -

மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் அந்த மூன்று போட்டியிலும் மிக மோசமாக விளையாடி தொடர்ச்சியாக மூன்று தோல்வியை பெற்று இங்கிலாந்து அணி பரிதாபமான நிலையில் தற்போது உள்ளது. அதன்படி மொத்தமாக 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டியில் தோல்வி, ஒரு போட்டியில் மட்டும் வெற்றி மற்றுமொரு போட்டியில் டிரா என 6 புள்ளிகளை மட்டுமே பெற்று கடைசி இடத்தில் இங்கிலாந்து அணி உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அணிகள் மத்தியிலேயே ஒரு காலத்தில் பெயர் போன இங்கிலாந்துஅணி தற்போது தொடர்ச்சியாக தோல்விகளை பெற்று வருவது, கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.