2022 ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் அடிப்படை விலை வெளியீடு – குறைந்த விலையில் இடம் பெற்றிருக்கும் தமிழக வீரர் ஷாருக் கான்

0
1982
Warner Ashwin and Sharuk Khan

2022ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் மாதம் அல்லது ஏப்ரல் மாதம் முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. புதிய 2 அணிகளை தவிர்த்து அனைத்து அணிகளும் தங்களுக்கு விருப்பப்பட்ட வீரர்களை தக்க வைத்துக் கொண்ட நிலையில், புதிய அணிகளான அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக தங்களுக்கு விருப்பப்பட்ட வீரர்களை நேற்று தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.

அகமதாபாத் அணி ஹர்திக் பாண்டியா, ரஷித் கான் மற்றும் சுப்மன் கில் ஆகியோரையும் லக்னோ அணி கேஎல் ராகுல், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோரை அதிகாரப்பூர்வமாக நேற்று கைப்பற்றிக் கொண்டன. தற்பொழுது அனைத்து அணிகளுக்கும் மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணி நிர்வாகமும் தங்களது கையிருப்பு தொகைக்குள் வீரர்களை வாங்கிக்கொள்ளலாம்.

- Advertisement -

மெகா ஏலப் பட்டியலில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் விவரம்

ஒவ்வொரு வருடமும் ஏலம் நடைபெறும் பொழுதெல்லாம் வெளிநாட்டு வீரர்கள் தங்களது பெயர்களை ஏலப் பட்டியலில் இணைத்துக் கொள்வார்கள். இந்த முறை மாபெரும் மெகா ஏலம் நடைபெற இருப்பதால் முன்பு இருந்ததை விட இந்த ஆண்டு ஏகப்பட்ட வீரர்கள் தங்களது பெயர்களை இணைத்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி நாட்டிலிருந்து 59 வீரர்கள், தென்னாப்பிரிக்க நாட்டிலிருந்து 48 வீரர்கள், மேற்கிந்திய தீவுகளிலிருந்து 41 வீரர்கள், இலங்கையிலிருந்து 36 வீரர்கள், இங்கிலாந்திலிருந்து 30 வீரர்கள், நியூசிலாந்திலிருந்து 29 வீரர்கள், ஆப்கானிஸ்தானிலிருந்து 20 வீரர்கள், நேபாலிலிருந்து 15 வீரர்கள், அமெரிக்காவில் இருந்து 14 வீரர்கள், வங்கதேசத்தில் இருந்து 9 வீரர்கள், நமீபியா நாட்டில் இருந்து 5 வீரர்கள், அயர்லாந்தில் இருந்து 3 வீரர்கள், ஓமனில் இருந்து 3 வீரர்கள், ஜிம்பாப்வேயில் இருந்து 2 வீரர்கள், பூட்டான் நெதர்லாந்து ஸ்காட்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஒரு தலா 1 வீரர்கள் என இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான வீரர்கள் ஏலப் பட்டியலில் வரிசை கட்டிக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

2 கோடி ரூபாய் பிரிவில் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ள வீரர்கள்

லிவிங்ஸ்டோன், நபி, பால்க்னர், ஹென்ரிக்ஸ், மெரிடித், பிலிப், ஷார்ட், டை, லாரன்ஸ், மில்ஸ், போப், கான்வே, காலின் டி கிராண்ட்ஹோமி, சான்ட்னர், மார்க்ராம், ரோசோவ், ஷம்சி, ரஸ்ஸி, வனிந்து ஹசரங்கா, சேஸ் மற்றும் ஷெர்ஃபேன் ஆகியோர் தங்களது அடிப்படை தொகையாக 2 கோடி ரூபாயை நிர்ணயம் செய்துள்ளனர்.

ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்கள்

பேர்ஸ்டோவ், பின்ச், லின், ஹோல்டர், ஹெட்மியர், நிக்கோலஸ் பூரன், ஹேல்ஸ், நாதன் லியான், அமித் மிஸ்ரா, மோர்கன், மாலன், இஷாந்த் ஷர்மா, சுந்தர், ரிச்சர்ட்சன், மில்னே, முன்ரோ, நீஷம், பிலிப்ஸ், சவுத்தி மற்றும் இங்க்ராம் ஆகியோர் தங்களுடைய அடிப்படை தொகையாக ஒரு கோடியே 50 லட்ச ரூபாயை நிர்ணயம் செய்துள்ளனர்.

2 கோடி ரூபாய் பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்கள்

வார்னர், ஃபாஃப், கம்மின்ஸ், ஹேசில்வுட், ஸ்மித், ஷகிப், ராய், போல்ட், ரபாடா, டி காக், மார்க் வுட் ஆகியோர் தங்களுடைய அடிப்படை தொகையாக 2 கோடி ரூபாயை தேர்வு செய்துள்ளனர்.

ஒரு கோடி ரூபாய்க்கு தங்களது பெயரை பதிவு செய்துள்ளார் இந்திய வீரர்கள்

ரஹானே, நிதிஷ் ராணா, மணீஷ் பாண்டே, சஹா, குல்தீப் யாதவ், சாவ்லா, ஜாதவ், பிரசித், நடராஜன் மற்றும் ஜெயந்த் யாதவ் ஆகிய இந்திய வீரர்கள் தங்களுடைய அடிப்படை தொகையாக ஒரு கோடி ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த் தன்னுடைய அடிப்படை தொகையாக 50 லட்ச ரூபாயை தேர்வு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழக வீரர் ஷாருக்கான் 20 லட்சத்திற்கான பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். சென்ற ஆண்டு 5.5 கோடிக்கு ஏலம் போன இவருக்கு இது மிகவும் குறைந்த தொகையே. எனினும் நிச்சயம் பெரிய தொகைக்கு வாங்கப்படுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

- Advertisement -