நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாத இறுதியில் தொடங்க உள்ளது. 8 அணிகளுக்கு பதிலாக 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான ஏலம் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்தது. ஊர் அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினர். மேலும் இந்த முறை 10 அணிகள் பங்கேற்பதால் அதிக வீரர்கள் ஏலம் சென்றனர். மிகவும் விமர்சையாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் விளையாடும் முக்கிய வெளிநாட்டு வீரர்களுள் ஆஸ்திரேலிய வீரர்களும் அடக்கம். ஐபிஎல் தொடரின் ஆரம்ப காலத்திலிருந்தே இந்த நாட்டை வீரர்களிடமிருந்து அதிக பங்களிப்பு இருந்து வருகிறது. ஹைடன், கில்கிறிஸ்ட், பாண்டிங், பிரெட் லீ, மெக்ராத், வார்னே போன்ற பல ஆஸ்திரேலிய ஜாம்பவான்கள் இந்த கிரிக்கெட் தொடரில் விளையாடி உள்ளனர். அதிலும் குறிப்பாக வார்னே கில்கிறிஸ்ட் போன்றவர்களெல்லாம் கேப்டனாக இருந்து தங்கள் அணிகளுக்கு ஐபிஎல் கோப்பையை பெற்று தந்துள்ளனர்.
தற்போதும் இதை ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து அதிக வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்று வருகின்றனர். வார்னர், கம்மின்ஸ், ஹேசல்வுட், சாம்ஸ், டிம் டேவிட் ஆகியோர் இந்த முறை ஐபிஎல் தொடரில் விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆனால் தற்போது ஐபிஎல் தொடரின் ஆரம்ப போட்டிகளில் இவர்கள் கலந்து கொள்ள முடியாதபடி ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இவர்கள் மேல் அதிகம் பணம் செலவழித்த அணி உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
வரும் மார்ச் மாத ஆரம்பத்தில் ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் சென்று அங்கே கிரிக்கெட் விளையாட உள்ளது. டெஸ்ட் ஒருநாள் டி20 என மூன்று விதமான கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை எதிர்த்து விளையாடுகிறது. இந்த தொடர் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நீடிப்பதால் இந்த தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரின் ஆரம்ப சில ஆட்டங்களில் விளையாட மாட்டார்கள் என்பது தெரியவந்துள்ளது.
வார்னர், மார்ஷ், மேக்ஸ்வெல், கம்மின்ஸ், ஸ்டோனிஸ், ஹேசல்வுட், வேட், சாம்ஸ் ஆகியோர் முக்கியமாக இந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் விளையாட இருப்பதால் ஐபிஎல் தொடரில் ஆரம்ப ஆட்டங்களில் பங்கேற்க மாட்டார்கள் என்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக இந்த அணியின் உரிமையாளர்கள் தற்போது மாற்று வீரர்களை குறித்து யோசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய வீரர்கள் இல்லாமல் ஐபிஎல் தொடரில் அவர்களுக்கு பதிலாக யாரை வைத்து விளையாட போகிறார்கள் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.