2022 ஐ.பி.எலுக்கு அந்தந்த அணிகள் தக்கவைத்துக் கொண்ட வீரர்கள் – இறுதிப்பட்டியலில் இடம்பிடிக்காத நட்சத்திர வீரர்கள்

0
399
IPL Retention List 2022

ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு விளையாடிய 8 அணிகளும், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு எந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ளப் போகிறோம் என்பதை அறிவிக்க கிட்டத்தட்ட தயார் நிலைக்கு வந்து விட்டனர். இன்று இரவு 9-30 மணிக்கு ஒவ்வொரு அடிகளும் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் அறிவிப்பதற்கு முன்பே ஓரளவுக்கு எந்தெந்த வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் கிடைத்து விட்டது. டெல்லி அணி முதன் முதலாக இந்த நான்கு வீரர்களை தக்க வைக்கப் போகிறோம் என்பதை அறிவித்தது. பண்ட், பிரித்வி ஷா, அக்ஷர் பட்டேல் மற்றும் நோக்கியா ஆகியோரை டெல்லி அணி தக்கவைத்துள்ளது.

சென்னை அணியை பொறுத்தவரை தனது இறுதி ஆட்டம் சென்னையில் தான் இருக்குமென்று தோனி இந்த மாத ஆரம்பத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூறினார். அதனால் அந்த அணி தோனி, ஜடேஜா, ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயீன் அலி ஆகிய நால்வரை தக்கவைத்துள்ளது. அதேபோல கொல்கத்தா அணியும் நரைன், ரசல், வருண் மற்றும் வெங்கடேஷ் ஆகிய நால்வரை தக்கவைத்துள்ளது. கடந்த தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம்பெற்ற வெங்கடேஷ் அதிக தொகைக்கு இந்த முறை ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெங்கடேஷை கொல்கத்தா அணி தனக்குள்ளேயே தக்க வைத்துக் கொண்டது.

- Advertisement -

இந்த மூன்று அணிகளும் தாங்கள் தக்க வைக்கப்போகும் வீரர்களை உறுதி செய்துவிட்ட நிலையில் மற்ற அணிகளுக்கு எல்லாம் உபரி நீடித்துக் கொண்டுள்ளது. மும்பை அணியைப் பொறுத்தவரை ரோகித் மற்றும் பும்ரா என இருவரை மட்டுமே தற்போது வரை தக்க வைத்துள்ளது. அதேபோல சன்ரைசர்ஸ் அணி யும் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் மட்டுமே இப்போது வரை தன்னுடன் வைத்துள்ளது. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை சஞ்சு சாம்சன் அடுத்த தொடரிலும் விளையாடுவார் என்று அதிகாரப்பூர்வமாக கூறிவிட்டது. ஆனால் மற்ற யாரையும் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

பெங்களூரு அணியை பொறுத்தவரை முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் தக்க வைத்துக் கொண்டுள்ளது. மற்ற இரண்டு வீரர்களுக்கான இடத்திற்கு இன்னமும் இழுபறி நீடித்து கொண்டுதான் இருக்கிறது. பஞ்சாப் அணி யாரையும் தக்கவைத்துக்கொள்ள விரும்புவதாக இன்றுவரை தெரியவில்லை. இன்று இரவுக்குள் அதிகாரப்பூர்வமாக ஒவ்வொரு அணியும் இந்த பட்டியலை வெளியிட உள்ளதால் யார் யார் அதை அணியில் இருக்கப்போகிறார்கள் யார் யார் வேறு அணிக்காக விளையாட போகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.