வருகிறது லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக் – மூன்று அணிகளுக்கான வீரர்கள் பட்டியல் வெளியீடு

0
1713
Legends Leauge Cricket

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை எழுந்துள்ளதால் இந்த முறை ஒரு நாள் தொடரை வென்று பழிதீர்க்கும் என்று ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர். மேலும் கேப்டன் விராட் கோலி பதவி விலகி விட்டதால் கேப்டன் பொறுப்பை பிசிசிஐ ரோஹித்துக்கு அளித்தது. ஆனால் போது காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்க முடியாமல் போனதும் கேப்டனாக ராகுல் செயல்படுவார் என்று அறிவித்தபடி, இந்திய அணி ராகுல் தலைமையில் விளையாடி வருகிறது.

தென் ஆப்பிரிக்க தொடர் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும் ரசிகர்களை மகிழ்விக்க மற்றொரு டி20 தொடர் நடக்க இருக்கிறது. இது முற்றிலும் புதிய தொடராக ஓமன் நாட்டில் நடைபெற உள்ளது. இந்த தொடரின் சிறப்பம்சமாக தொடர் முழுக்க ஓய்வுபெற்ற முன்னாள் சர்வதேச வீரர்கள் விளையாடுகின்றனர். வரும் ஜனவரி 20ஆம் தேதி இந்த தொடர் தொடங்க உள்ளது. இந்திய மகராஜாஸ், ஆசிய லயன்ஸ், வோர்ல்ட் ஜெயன்ட்ஸ் என மூன்று அணிகள் பங்கேற்க உள்ளன.

- Advertisement -

மூன்று அணிகளுமே ஒவ்வொரு அணியும் எதிர்த்து தலா இரண்டு முறை இந்த தொடரில் விளையாட உள்ளது. அதன்பிறகு புள்ளிகளின் அடிப்படையில் முதல் இரண்டு இடம் பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அதில் விளையாட உள்ளன. இந்திய மஹாராஜா அணியில் முன்னாள் சர்வதேச இந்திய வீரர்களும், ஆசியா லயன்ஸ் அணியில் இந்தியா தவிர மற்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்களும் விளையாட உள்ளனர். வேர்ல்ட் ஜெயன்ட்ஸ் அணியில் கிரிக்கெட் விளையாடும் மற்ற உலக நாடுகளில் இருந்து முன்னாள் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்திய மகாராஜா அணி

சேவாக், யுவராஜ், ஹர்பஜன், இர்ஃபான், யூசுஃப், கைஃப், பத்ரிநாத், ஓஜா, நமன் ஓஜா, ஆர்.பி.சிங், கோனி, பதானி, வேணுகோபால், முனாஃப், பங்கர், மோங்கியா, மற்றும் அமித் பந்தாரி.

ஆசிய லயன்ஸ் அணி

அஃப்ரிடி, ஜெயசூர்யா, அக்தர், ஆஃகான், வாஸ், முரளிதரன், அக்மல், களுவிரத்னா, தில்ஷன், அசார், தரங்கா, மிஸ்பா, யூசுஃப், ஹபீஸ், குல், மாலிக்

- Advertisement -

வேர்ல்ட் ஜெயன்ட்ஸ் அணி

சமி, வெட்டோரி, லீ, ரோட்ஸ், பீட்டர்சன், தாகிர், ஓவைஸ் ஷா, கிப்ஸ், ஆல்பி மார்க்கல், மார்னே மார்க்கல், கோரி ஆண்டர்சன், பனீசர், ஹாடின், கெவின் ஓ பிரையன், பிரண்டன் டெய்லர்.