2022ஆம் ஆண்டு இந்திய அணி பங்கேற்கும் தொடர்களின் முழு கால அட்டவணை வெளியீடு

0
578
Rahul Dravid Virat Kohli and Rohit Sharma

நடப்பு ஐ.பி.எல் தொடர் இந்த மாதம் 26ஆம் தேதி முடிந்ததும், இந்திய அணி உடனடியாக அடுத்தடுத்து சர்வதேச தொடர்களில் பங்கேற்க உள்ளது. நடப்பு 2022ஆம் ஆண்டில் மீதம் இருக்கும் மாதங்களில் எந்தெந்த கிரிக்கெட் வடிவ தொடர்களில், எந்தெந்த நாடுகளில் எங்கு மோதுகிறது என்கின்ற அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது.

அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட இருபது ஓவர் போட்டி தொடரில் விளையாட இந்தியா வருகிறது செளத் ஆப்பிரிக்க அணி. இந்தத் தொடரின் போட்டிக்கான அட்டவணை.

- Advertisement -

முதல் போட்டி ஜூன் 9ஆம் தேதி டெல்லியிலும், இரண்டாவது போட்டி ஜூன் 12ஆம் தேதி ஓடிசா மாநிலத்தின் கட்டாக்கிலும், மூன்றாவது போட்டி ஜூன் 14ஆம் தேதி ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டிணத்திலும், நான்காவது போட்டி ஜூன் 17ஆம் தேதி குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டிலும், ஐந்தாவது போட்டி ஜூன் 19ஆம் தேதி பெங்களூரிலும் நடக்கவிருக்கிறது. இந்தப் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்குத் துவங்குகிறது.

இதற்கடுத்து இங்கிலாந்தில் மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணி பங்கேற்க இருக்கிறது. இதற்கு முன்பாக அங்கு அயர்லாந்து அணியுடன் இரண்டு இருபது ஓவர் போட்டிகளில் இந்திய அணி விளையாகிறது. இந்த அணிக்குத் தலைமைப் பயிற்சியாளராக லஷ்மண் பொறுப்பேற்க இருக்கிறார். இங்கிலாந்து அணியுடன் 2021ஆம் ஆண்டு விளையாடிய டெஸ்ட் தொடரில், கொரோனோவால் விளையாட முடியாமல் நின்ற, எஞ்சியிருக்கும் ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி, அதற்கான பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்க இருப்பதால், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் டிராவிட்டால் அயர்லாந்து தொடருக்குப் பயிற்சியாளராய் பணியாற்ற முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதற்காக இரண்டு விதமான இந்திய அணியும் அறிவிக்கப்பட உள்ளது. அயர்லாந்து அணியுடனான முதல் போட்டி ஜூன் 26, இரண்டாவது போட்டி ஜூன் 28ஆம் தேதிகளில் டப்ளின் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணியளவில் நடக்கிறது.

இதற்கடுத்து இங்கிலாந்து அணியுடனான ஒரு டெஸ்ட் போட்டி ஜூலை 1 முதல் ஜூலை 5ஆம் தேதி வரை நடக்கிறது. இதற்கடுத்து மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில், முதல் ஆட்டத்தில் ஜூலை 7ஆம் தேதி செளதாம்படன் மைதானத்திலும்,
இரண்டாவது போட்டி ஜூலை 9ஆம் தேதியும், மூன்றாவது போட்டி ஜூலை 10ஆம் தேதியும், பர்மிங்ஹாம் மைதானத்தில் நடக்கிறது. இதற்கடுத்த மூன்று ஒருநாள் போட்டி தொடரின் முதல் போட்டி ஜூலை 12ஆம் தேதியும், இரண்டாவது போட்டி 14ஆம் தேதியும் லண்டன் மைதானத்தில் நடக்கிறது. மூன்றாவது போட்டி ஜூலை 17ஆம் தேதி மான்ஸ்செஸ்டர் மைதானத்தில் நடக்கிறது.

- Advertisement -

இதற்கடுத்து உடனே இங்கிலாந்திலிருந்து வெஸ்ட் இன்டீஸ் பறக்கும் இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்கிறது.

இதில் மூன்று ஒருநாள் போட்டிகள் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் ஒரே இடத்தில் ஜூலை 22, 24, 27 தேதிகளில் நடக்கிறது. அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஜூலை 29ஆம் தேதி பிரையன் லாரா மைதானத்திலும், இரண்டாவது, மூன்றாவது போட்டி ஆகஸ்ட் 1, 2 ஆம் தேதிகளில் அடுத்த நாளில் வார்னர் மைதானத்தில் நடக்கிறது. இதில் நான்காவது, ஐந்தாவது போட்டி ஆகஸ்ட் 6, 7ஆம் தேதிகளில் அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தின் போர்ட் லாடர்டேல் மைதானத்தில் நடக்கிறது.

மேலும் இந்தத் தொடர்களுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவோடு மூன்று இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரிலும், ஆசியக் கோப்பையிலும், இத்தோடு அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் இருபது ஓவர் உலகக்கோப்பையிலும் இந்திய அணி விளையாட திட்டமிட்டருக்கிறது. ஐ.பி.எல் தொடர் முடிந்தாலும் இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களில் தொடர்ச்சியாய் இந்திய அணி சர்வதேச போட்டிகளில் விளையாட இருக்கின்றது!