வெறித்தனமான ஆட்டம்.. வெறித்தனமான கொண்டாட்டம்! – சதமடித்து ஆக்ரோஷம் காட்டிய ஹென்றிச் கிளாசன்! சமாளிக்குமா ஆர்சிபி?

0
171

ஆர்சிபி அணிக்கு எதிராக வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் ஐபிஎல் சதத்தை அடித்துள்ளார் ஹென்ரிச் கிளாசன்.

ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் மிக முக்கியமான கட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது ஆர்சிபி அணி. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிளசிஸ் பௌலிங் தேர்வு செய்தார்.

- Advertisement -

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டது. ஆர்சிபி அணி தனது கடைசி இரண்டு லீக் போட்டடிகளில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் வாய்ப்பு உயிர்ப்புடன் இருக்கும் என்பதால் ஹைதராபாத் அணியை விட ஆர்சிபி அணிக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா 11 ரன்கள் மற்றும் ராகுல் திரிப்பாதி 15 ரன்கள் அடித்து ஆட்டமிழந்து மோசமான துவக்கத்தை கொடுத்தனர். பின்னர் கேப்டன் எய்டன் மார்க்ரம் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஹைதராபாத் அணிசற்று தடுமாற்றம் கண்டது.

அந்த நேரத்தில் உள்ளே வந்த ஹென்ரிச் கிளாசன் ஆர்சிபி ஸ்பின் பவுலர்களை வெளுத்து வாங்கினார். இதனால் ஆர்சிபி அணி இவருக்கு என்ன திட்டம் செய்வது என்பதை புரியாமல் திணறியது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு சிக்ஸர்களாக விளாசி வந்த இவர், விரைவாக அரைசதம் கடந்தார்.

- Advertisement -

அதன் பின்னரும் நிற்காமல் அதிரடியை வெளிப்படுத்தி வந்தார் கிளாசன். மறுபக்கம் ஹாரி புரூக் சிங்கிள் எடுத்து கிளாசனுக்கு ஸ்ட்ரைக் கொடுக்க, அதை பவுண்டரிகளாக அடித்து வந்தார்.

ஓவருக்கு ஓவர் 10-12 ரன்கள் ஹைதராபாத் அணியின் பக்கம் வந்து கொண்டிருந்தது. கிளாசன் 49 பந்துகளில் முதல் ஐபிஎல் சதத்தை சிக்சர் அடித்து பதிவு செய்தார்.

இவர் அவுட்டானப்பின் அணியின் ஸ்கோர் சற்று குறைந்தது. ஒரு கட்டத்தில் 200 ரன்களை கடப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தபோது சரியான நேரத்தில் ஆர்சிபி பவுலர்கள் சில விக்கெட்டுகளை எடுத்ததால், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்தது ஹைதராபாத் அணி. இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த புரூக் 27 ரன்கள் அடித்தார்.

இந்த தொடர் முழுவதும் ஹைதராபாத் அணிக்கு ஒற்றை நம்பிக்கையாக இருந்து வந்திருக்கிறார் கிளாசன். இவர் 10 போட்டிகளில் கிட்டத்தட்ட 420 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் மூன்று அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடங்கும்.

12 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் இருக்கும் ஆர்சிபி அணி கடைசி இரண்டு லீக் போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இந்த சிக்கலான மைதானத்தில் 187 ரன்கள் எனும் கடின இலக்கை சேஸ் செய்து ஆர்சிபி அணி வெற்றி பெறுமா? பிளே-ஆப் வாய்ப்பை தக்க வைக்குமா? என்பதை போட்டியின் இரண்டாம் பாதியில் பார்க்கலாம்!