தற்போது கேஎல்.ராகுல் பெரிய ரன்கள் எடுப்பதற்கு பின்னணியில் முக்கியமான ஒரு நபர் இருப்பதாகவும், அவருடன் இணைந்து வேலை செய்த காரணத்தினால் கேஎல்.ராகுல் பேட்டிங் சிறப்பாக மாறி இருப்பதாகவும் இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 42 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கேஎல்.ராகுல் தவறவிட்டது விமர்சனமாக மாறியது. இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 137 ரன்கள் எடுத்து விமர்சனங்களுக்கு கேஎல்.ராகுல் சிறப்பான பதிலை கொடுத்திருக்கிறார்.
கேஎல்.ராகுலுக்கான பிரச்சனை
கேஎல்.ராகுல் இந்திய அணிக்குள் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வீரராக இருந்தார். ஆனால் அவர் சீராக ரன்கள் எடுக்காமல், தனக்கு கிடைக்கும் தொடக்கங்களை பயன்படுத்திக் கொள்ள முடியாதவராக, அணிக்கு நம்பிக்கையை கொடுக்கக் கூடியவராக இல்லாதது பிரச்சினையை உண்டாக்கியது.
இதன் காரணமாக அவருக்கு அணியில் நிரந்தர இடம் இல்லாமல் போனது. இதனால் தேவைக்கு தகுந்தபடி அணி நிர்வாகம் அவரை கண்ட இடங்களில் விளையாட வைத்தது. அப்படியான நிலையில் சில மாதங்களாக சாம்பியன்ஸ் டிராபி ஆரம்பித்து ஐபிஎல் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் என அவருடைய பேட்டிங் நிலைத்தன்மை அதிகரித்திருக்கிறது. இதற்கு பின்னணியில் ஒருவர் இருப்பதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்திருக்கார்.
இவருடன் சேர்ந்து வேலை செய்தார்
தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு கிரிக்கெட் வர்ணனையாளராக சென்று இருக்கும் தினேஷ் கார்த்திக் கேஎல்.ராகுல் பற்றி பேசும் பொழுது ” ஒரு கிளட்ச் பிளேயர் கிளட்ச் கிரிக்கெட்டை விளையாட ஆரம்பித்து விட்டார். தற்போது அவர் தனது சிறந்த கிரிக்கெட்டை விளையாடுகிறார். இனி இவரை தடுத்து நிறுத்துவது கடினம்”
இதையும் படிங்க : இந்திய அணிக்கு.. இந்த இங்கிலாந்து வீரர் மாதிரி ஒரே ஒருத்தர் இருந்தா.. பிரச்சனையே வராது – புஜாரா கருத்து
“சமீபத்தில் இந்திய அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக வந்த அபிஷேக் நாயருடன் இணைந்து கேஎல்.ராகுல் தனது பேட்டிங்கில் மிகக் கடுமையான முறையில் உழைத்து வேலை செய்திருக்கிறார். அபிஷேக் நாயருடன் இணைந்தது பெரிய மாற்றத்தை உண்டாக்கி இருக்கிறது. இதன் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி, ஐபிஎல் மற்றும் தற்போது இங்கிலாந்து சிறப்பாக இருக்கிறார். அங்கிருந்து அவர் திரும்பி பார்க்கவே இல்லை” என்று கூறி இருக்கிறார்.






