ஐபிஎல் தொடரில் மிகவும் அதிரடியாக விளையாடிக் கொண்டு வரும் ஹைதராபாத் அணி அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரை நம்பி கிடையாது என அந்த அணியின் இன்னொரு அதிரடி ஆட்டக்காரர் ஹென்றி கிளாஸ் என்று கூறியிருக்கிறார்.
தற்போது ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ஒரு அணி 300 ரன்கள் ஒரு இன்னிங்ஸ் எடுக்க முடியும் என்றால் அந்த அணி ஹைதராபாத் அணியாக மட்டுமே இருக்க முடியும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகிறார்கள். அந்த அணியின் முதல் ஐந்து பேட்ஸ்மேன்கள் மிகவும் அதிரடியாக விளையாடக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று தங்களது அதிரடியான முறையில் தொடர்ந்து விளையாட முயற்சி செய்த ஹைதராபாத் அணி 190 ரன்கள் மட்டுமே எடுத்து பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் ஆட்டம் இழந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா சீக்கிரத்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்.
இதற்கு அடுத்து பேட்டிங் செய்த லக்னோ அணி 16 ஓவர்களில் இழக்க எட்டி அபார வெற்றி பெற்றது. இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் சுமாரான அணியாக கணிக்கப்பட்டு இருக்கும் லக்னோ அணி மிகவும் பலம் வாய்ந்த ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. இதன் காரணமாக தற்பொழுது அந்த அணியின் அதிரடியான பேட்டிங் அணுகுமுறை விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
கிளாசன் கொடுத்த விளக்கம்
இது குறித்து ஹென்றி கிளாசன் கூறும் பொழுது “எங்கள் பேட்டிங் அணுகுமுறை தவறானது கிடையாது. நாங்கள் நம்பர் எட்டு வரையில் எங்களிடம் அழிவுகரமான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். அதே எங்கள் ஓபனிங் பேட்ஸ்மேன் இல்லாமலே நாங்கள் சிறப்பாக விளையாடக்கூடிய அளவுக்கு இருக்கிறோம். அவர்கள் சிறப்பாக விளையாடும் பொழுது எதிரணி அழுத்தத்திற்கு உள்ளாகிறது. எங்கள் வேலை எளிதாகிறது. ஆனால் அதிகமாக ரிஸ்க் எடுக்கும் பக்கத்தில் இருக்கிறோம். ஆனால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் அளவுக்கு பெரிய வீரர்கள் எங்களிடம் இருக்கிறார்கள்”
இதையும் படிங்க : வருத்தமா இருக்கு.. இந்த வருஷம் ஐபிஎல் கமெண்ட்ரி வரமாட்டேன் காரணம் இதுதான் – ஆர் ஜே பாலாஜி பேட்டி
“இந்த போட்டியில் நாங்கள் போதுமான ரன்கள் எடுக்க வில்லை. 210 முதல் 220 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். நாங்கள் துரதிஷ்டவசமான முறையில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தோம். லெக் சைடு ஒரு கேட்ச் கொடுத்தோம். அடுத்து பவுலர் கையில் பட்டு ஒரு ரன் அவுட் ஆகியது. இது விளையாட்டின் ஒரு பகுதி நாங்கள் போதுமான அளவு பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் ரன் எடுக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.