வருத்தமா இருக்கு.. இந்த வருஷம் ஐபிஎல் கமெண்ட்ரி வரமாட்டேன் காரணம் இதுதான் – ஆர் ஜே பாலாஜி பேட்டி

0
54

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் ரன்குவிப்பில் ஈடுபட்டு வருவதால் ரசிகர்களுக்கு இது ரன் விருந்தாக இருக்கின்றது. எனினும் உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள் இது வீடியோ கேம் போல் இருப்பதாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகள் வழக்கம் போல் இம்முறை ஆங்கிலம், தமிழ், ஹிந்தி ,தெலுங்கு, கன்னடம், போஜ்புரி, பெங்காலி ஆகிய மொழிகளில் வர்ணனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளை பார்க்க ஏதுவாக இருக்கிறது. அதில் குறிப்பாக தமிழ் கிரிக்கெட் வர்ணனையில் ஆர் ஜே பாலாஜி செய்யும் அட்டகாசம் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே ஒரு பேசும் பொருளாக இருக்கும்.

- Advertisement -

மிகவும் பிடித்த பணி:

சிலர் ஆர்.ஜே பாலாஜியின் கிரிக்கெட் வர்ணனையை எதிர்த்தாலும் பலரும் அதனை ரசிப்பதுண்டு. இந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடர் ஒரு வாரமாகியும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஆர் ஜே பாலாஜியின் குரலை கேட்க முடியவில்லை என பல ரசிகர்களும் கேள்வி கேட்டு வந்தனர்.

தற்போது இதற்கு ஆர் ஜே பாலாஜி பதிலளித்திருக்கிறார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “எனக்கு வருடத்தில் ஏப்ரல், மே மாதம் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் இந்த சீசன் தான் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும். ஐபிஎல் போட்டிகளில் கிரிக்கெட் வர்ணனை செய்வது என்பது எனக்கு மிகவும் பிடித்த பணியில் ஒன்று.”

- Advertisement -

ஐபிஎல் தொடருக்கு வர மாட்டேன்:

“இதனை நான் விரும்பி செய்வேன். ஆனால் இம்முறை பலரும் என்னை பார்த்து ஏன் நீங்கள் இன்னும் கிரிக்கெட் வர்ணனை செய்ய வரவில்லை என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் சொல்லிக் கொள்வது. இந்த சீசன் நான் கிரிக்கெட் வர்ணனை செய்ய வர மாட்டேன்.”

இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் சிஎஸ்கே.. முதல் இடத்திற்கு செல்ல என்ன செய்யனும்?

“தற்போது நான் திரைப்படம் ஒன்றை இயக்கிக் கொண்டு வருகின்றேன். இது மிகவும் சவாலான பணியாக இருக்கிறது. பல பொறுப்புகளை ஏற்று நான் இந்த பணியை செய்து வருகிறேன். ஒரே நேரத்தில் ஒரு பணியை தான் செய்ய வேண்டும். இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு வர்ணனை செய்ய வரமாட்டேன். இருந்தாலும் சிஎஸ்கேவுக்கு என்னுடைய ஆதரவு எப்போதும் இருக்கிறது. என்னை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது ஐபிஎல் தொடர் கிரிக்கெட் வர்ணனை தான். இந்த ஆண்டு நான் மிஸ் செய்தாலும் அடுத்த ஆண்டு கண்டிப்பாக நான் கிரிக்கெட் வர்ணனை செய்ய வந்து விடுவேன். உங்களை அனைவரையும் நான் மிஸ் செய்கிறேன் என்று ஆர்.ஜே பாலாஜி வீடியோவில் கூறியிருக்கிறார்.”

- Advertisement -