தலை வலிக்குது முட்டாள்தனம்.. பிசிசிஐ மீது மேக்ஸ்வெல் குற்றச்சாட்டு.. வார்னர் பதிலடி.!

0
48318

தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 24 ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி நெதர்லாந்து அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக்கோப்பையில் வரலாற்று சாதனையான வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணியின் ரன் ரேட் விகிதமும் நன்றாக உயர்ந்துள்ளது.

முன்னதாக நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு டேவிட் வார்னர் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் அபாரமாக சதம் எடுத்தனர். குறிப்பாக மேக்ஸ்வெல் நேற்றைய போட்டியில் 40 பந்துகளில் சதம் அடித்து உலகக்கோப்பையில் அதிவேக சதம் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர் 44 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 8 சிக்ஸர்களும் 9 பவுண்டடிகளும் அடங்கும்.

- Advertisement -

இவரது அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 399 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து ஆடியன் எதெல்லாம் தனி 90 ரன்கள் எடுத்து 20 ஓவர்களில் ஆல் அவுட் ஆனது. இந்தப் போட்டியில் கிளன் மேக்ஸ்வெல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் போட்டிக்கு பின் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய மேக்ஸ்வெல் போட்டியில் ட்ரிங்க்ஸ் பிரேக்கின் போது நடைபெறும் லேசர் நிகழ்ச்சியை விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் போட்டிகளில் ட்ரிங்க்ஸ் பிரேக்கின் போது நடைபெறும் லேசர் நிகழ்ச்சிகள் மற்றும் லைட் ஷோ ஒரு முட்டாள்தனமான யோசனை என கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் மேக்ஸ்வெல்” இதே போன்ற லைட் நிகழ்ச்சிகள் ஒருமுறை பெர்த் மைதானத்திலும் பிக் பேஸ் கிரிக்கெட் போட்டியில் இப்போது நடைபெற்றது. அதில் எனக்கு கடுமையான தலைவலி உண்டானது . மேலும் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் தூங்கும்போது எனது கண்களை அந்த ஒளிக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்ள மிகவும் சிரமப்பட்டதாக” தெரிவித்திருக்கிறார்.

மேலும் இது தொடர்பாக தொடர்ந்து பேசிய மேக்ஸ்வெல்” இது ஒரு முட்டாள்தனமான யோசனை. கிரிக்கெட் வீரர்களுக்கு இது போன்ற ஒளிக்கு உடனடியாக தங்கள் கண்களை அட்ஜஸ்ட் செய்து கொள்வது மிகவும் சிரமமான காரியமாக இருக்கிறது. பெர்த் மைதானத்தில் ஒரு விக்கெட் விழுந்தபோது லைட் ஷோ நடைபெற்றது. நான் எதிர் முனையில் இருந்தேன். இருந்தாலும் கண்களை உடனடியாக அந்த வெளிச்சத்திற்கு அட்ஜஸ்ட் செய்து கொள்வது மிகவும் சிரமமாக இருந்தது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கலாம். ஆனால் விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் சிரமமான ஒன்று” என கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

- Advertisement -

மேலும் இது குறித்து ஆஸ்திரேலியா அணியின் சக வீரரான டேவிட் வார்னர் மாற்றுக் கருத்தை பதிவு செய்து இருக்கிறார். இது தொடர்பாக சமூக வலைதளத்தின் மூலம் பதில் அளித்திருக்கும் அவர்” இந்த நிகழ்ச்சி மிகவும் அருமையான ஒன்று. நான் அதனை மிகவும் ரசித்தேன். என்ன ஒரு அருமையான நிகழ்ச்சி. ரசிகர்களுக்கு மிகவும் அருமையான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எல்லாமே ரசிகர்களுக்காகத்தான். உங்களால்தான் நாங்கள் விரும்பிய விஷயங்களை செய்ய முடிகிறது” என பதிவு செய்திருக்கிறார்.

மேலும் மேக்ஸ்வெல் குறித்து பேசியவர்” மேக்ஸ்வெல் மீண்டும் ஃபார்முக்கு திரும்பி இருப்பது சிறப்பான ஒரு விஷயம் இது அவருக்கு ஒரு ஸ்பெஷல் ஆன தினம். இந்த சதத்தை அவர் புதியதாக பிறந்த தனது குழந்தைக்கு சமர்ப்பித்தார். ஐபிஎல் தொடரின் இப்போதே இதே மாதிரியான ஆடுகளங்களில் விளையாடுவது எப்படி என்பது பற்றி விவாதித்து இருக்கிறோம். இங்கு எப்போதும் டைமிங் மற்றும் ரிதம் முக்கியம்” என தெரிவித்திருக்கிறார் டேவிட் வார்னர்.