நடப்பு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியிடம் பஞ்சாப் கிங்ஸ் தோல்வியடைந்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இந்த நிலையில் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் வெற்றி பாண்டியன் அணியைக் குறித்து பேசி இருக்கிறார்.
ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான செயல்பாட்டை கொண்ட அணியாக பஞ்சாப் கிங்ஸ் இருந்து வந்திருக்கிறது. சரியாக 11 ஆண்டுகளுக்குப் பிறகு ரிக்கி பாண்டிங் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணியில் ப்ளே ஆப் சுற்றுக்கு சென்றது மட்டும் இல்லாமல் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
சொன்னதை செய்தேன்
இதுகுறித்து பஞ்சாப் கிங்ஸ் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பேசும்பொழுது ” இந்த வடிவ கிரிக்கெட்டில் நீங்கள் ஒரு பேட்ஸ்மேன் ஆக அவுட் ஆவதை பற்றி கவலைப்பட முடியாது. நீங்கள் அவுட் ஆவதை பற்றி கவலைப்பட்டால் உங்களால் இந்த வடிவத்தில் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியாது. எங்களுடைய இளம் வீரர்கள் பேட்டிங் செய்ததும் குறித்து பேசாமல் இருக்க முடியாது. ஸ்ரேயாஷ் ஐயருடன் முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே துணிச்சலான, துடிப்பான, வித்தியாசமான ஒரு அணியாக மாறுவதை பற்றிதான் பேசி இருப்பேன்”
“இதன் பின்னணியில் இளம் வீரர்களான எங்களது தொடக்க ஆட்டக்காரர்கள் கடந்த இரண்டரை மாதங்களாக என்ன செய்திருக்கிறார்கள் என்பதை ஊடகங்களின் வாயிலாக தேவையான அளவுக்கு நாம் தெரிந்து இருக்கிறோம். நாங்கள் எங்கள் கிரிக்கெட்டை விளையாடிய விதம் மிகவும் சுவாரசியமாக இருந்தது. ஒரு பயிற்சியாளராக அமைதியாக உட்கார்ந்து அணியை பற்றி சொல்வது மிகவும் திருப்தியாக இருக்கிறது”
அனுபவம் பிரச்சனை இல்லை
“நேற்று நடந்ததை வைத்து எங்கள் அணிக்கு அனுபவம் இல்லாதது தான் பிரச்சனையா என்று நீங்கள் கேட்கலாம். மிடில் ஆர்டரில் கொஞ்சம் அனுபவம் இருந்திருந்தால் உதவி செய்திருக்கலாம். மேலும் பவர் பிளேவில் நான்காவது ஓவரில் கொஞ்சம் தற்காப்பை தாண்டி இருக்கலாம். ஆனால் எனக்கு தெரிந்தது என்னவென்றால் இந்த இளம் வீரர்கள் நீண்ட காலம் அணியில் இருப்பார்கள். மேலும் எதிர்காலத்தில் எங்களுக்கு இவர்கள் அதிக போட்டிகளில் வெற்றியை பெற்றுத் தருவார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : ஐபிஎல் தொடருக்கு முன்பே எழுதி வைத்து.. சொன்னதை சாதித்த ஜிதேஷ் சர்மா.. ஓய்வறையில் என்ன நடந்தது?
இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்த பஞ்சாப் கிங்ஸ் அணியை உருவாக்கியதில் மிகவும் முதன்மையானவர் ரிக்கி பாண்டிங்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமும் அவருடைய விருப்பத்தின் பேரில் மட்டுமே தேர்வு செய்யப்பட்டது. இறுதியாக அதற்கான பலன் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது!






