நடந்து முடிந்த ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே ஒரு விஷயத்தை எழுதி வைத்து ஆர்சிபி அணியின் வீரர் ஜிதேஷ் சர்மா அதை எழுதி வைத்த படியே செய்து அசத்தியிருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட இவரை 11 கோடி ரூபாய் கொடுத்து ஆர்சிபி வாங்கியது. மிக முக்கியமான இரண்டு போட்டிகளில் ஆர்சிபி அணிக்கு ஜிதேஷ் சர்மா மிகச்சிறப்பான பங்களிப்பை கொடுத்து அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார்.
ஜிதேஷ் சர்மாவின் பங்களிப்பு
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிப்பதற்கு லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் இருந்தது. இந்த போட்டியில் ஆர்சிபி அணி தோற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜிதேஷ் சர்மா 33 பந்தில் 85 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்து முதல் தகுதி சுற்றில் விளையாட வைத்தார்.
மேலும் நேற்று இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணி 170 ரன்கள் எடுக்கலாம் என்று இருந்த நிலையில், பேட்டிங் செய்ய வந்த ஜிதேஷ் சர்மா ஆடுகளத்தை பற்றி கவலைப்படாமல் அதிரடியாக 10 பந்தில் 24 ரன்கள் எடுத்தார். இவருடைய அதிரடி தான் போட்டியை மாற்றுவதற்கு முக்கியமான காரணமாக இருந்தது. இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஆர்சிபி டிரெஸ்ஸிங் ரூமில் ஜிதேஷ் சர்மா எழுதி வைத்த விஷயத்தை சிறப்பாக முடித்து இருக்கிறார்.
என்ன நடந்தது?
ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஆர்சிபி ட்ரெஸ்ஸிங் ரூமில் எழுதிய ஜிதேஷ் சர்மா “ஆர்சிபி அணி கோப்பையை வெல்லும் அப்பொழுது என்னுடைய வலது பக்கத்தில் விராட் கோலியின் இடது பக்கத்தில் தினேஷ் கார்த்திக்கும் இருக்க வேண்டும். மேலும் இறுதிப்போட்டியில் இரண்டு பந்துகளுக்கு ஆறு ரன்கள் தேவைப்படும்போது நான் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று எழுதி இருந்தார். தற்போது அவர் விரும்பிய படியே இருவரையும் வைத்து நடுவில் அவர் இருந்து கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: உடனே ஹர்திக் பாண்டியாவுக்கு போன் பண்ணி அதை சொன்னேன்.. என்னோட பலமே இதுதான் – குருனால் பாண்டியா பேச்சு
இதுகுறித்து ஜிதேஷ் சர்மா கூறும்பொழுது “நான் மார்ச் மாதம் ஆர்சிபி அணியில் இணைந்த பொழுது எனக்காகவோ அல்லது அணிக்காகவோ ஏதாவது ஒன்றை எழுதும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. அப்பொழுது தான் இதை நான் எழுதினேன்” என்று கூறி இருக்கிறார்.






