இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று இருக்கும் கவுதம் கம்பீர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கு கிளம்புவதற்கு முன்பாக அணியின் துணை பயிற்சியாளர்கள் யார்? என்பது குறித்து அவர் சில கருத்துக்களை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
ராகுல் டிராவிட் பயிற்சி காலத்தில் இருந்த துணை பயிற்சியாளர்கள் குழு முற்றிலும் கலைக்கப்படவில்லை என்பது தெரிகிறது. அந்தக் குழுவில் இருந்த பீல்டிங் பயிற்சியாளர் டி.திலீப் மீண்டும் அதே பொறுப்பில் இந்திய அணியில் தொடர்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
அதே சமயத்தில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் பயிற்சியாளர்கள் புதிதாக கவுதம் கம்பீர் விருப்பப்படி நியமிக்கப்படுவார்கள். கம்பீர ஏற்கனவே இந்த பொறுப்புக்கு சில பெயர்களை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்தது. தற்போது பத்திரிகையாளர் சந்திப்பில் பேசி இருக்கும் கம்பீரும் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து கம்பீர் கூறும் பொழுது “உதவி பயிற்சியாளர்கள் யார் என்பது குறித்து இலங்கை சுற்றுப்பயணத்திற்கு அடுத்து ஒரு மாத கால இடைவெளியில் நாங்கள் சிந்திப்போம். ஆனால் நான் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட் ஆகியோருடன் பணியாற்றினேன். அவர்கள் மிகவும் சிறப்பானவர்களாக இருந்தார்கள். நான் மீண்டும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.
விளையாட்டில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானது அதிலிருந்து நாங்கள் விலக மாட்டோம். நாங்கள் நேர்மையான முறையில் அதே சமயத்தில் கடினமாக விளையாடுவோம். மகிழ்ச்சியான ட்ரெஸ்ஸிங் ரூம் என்பது வெற்றி பெறுகின்ற டிரெஸ்ஸிங் ரூம்தான். நாங்கள் வீரர்களுக்கு நல்ல முறையில் உதவி அவர்களிடம் இருக்கும் சிறந்ததை வெளியில் கொண்டு வருவதற்கு உதவி செய்வோம். எங்களைப் போன்ற ஆதரவு ஊழியர்களின் முக்கிய வேலை வீரர்களை மகிழ்ச்சியான இடத்தில் வைத்திருப்பதுதான்.
இதையும் படிங்க : லாரா எங்களை பற்றி சொன்னது ரொம்ப தப்பானது.. அவர் மன்னிப்பு கேட்கணும் – ரிச்சர்ட்ஸ் ஹூப்பர் கூட்டு அறிக்கை
இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் நான் கேட்ட பெரும்பாலான விஷயத்திற்கு அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. தனிப்பட்ட முறையில் பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் பந்துவீச்சு பயிற்சியாளராக ரியான் டென் டோஸ்டேட் ஆகியோரை நான் விரும்புகிறேன். மேலும் பயிற்சியாளர்கள் ஒரு துறையில் மட்டுமே கவனம் செலுத்தாமல் மூன்று துறையிலும் கவனம் செலுத்த வேண்டும். இதன் காரணமாகவே இலங்கை சுற்றுப்பயணத்திற்கு பிறகு நம் அணியின் துணை பயிற்சியாளர்கள் பற்றி தெரியவரும்” என்று கூறியிருக்கிறார்.