இந்திய அணிக்கு ஓர் ஆண்டு மட்டுமே பயிற்சியாளராக திகழ்ந்த 5 ஜாம்பவான் வீரர்கள்

0
1704
Kapil Dev and Anil Kumble

இந்திய அணியின் வெற்றிகரமான பயிற்சியாளராக ரவி சாஸ்திரி விளங்குகிறார். சமீபத்தில், ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி இலங்கை சென்று ஒருநாள் தொடரை வென்றது. அவரையும் சேர்த்து இதுவரை இந்திய அணிக்கு 25 நபர்கள் பயிற்சியாளராக இருந்துள்ளனர். ஒரு தேசிய அணியின் தலைமை பயிற்சியாளராக பணிபுரிவது எளிதான காரியம் அல்ல. வெளிநாட்டு வீரர்களில் ஜான் ரைட் மற்றும் கேரி கிரிஸ்டன், சிறப்பாக பணியாற்றி இந்திய அணியின் தரத்தை உயர்த்தினர்.

கபில் தேவ் விலகிய பிறகு, 2000களில் ஜான் ரைட் இந்திய அணியை சரியான பாதையில் அழைத்துச் சென்றார். 28 வருடங்களுக்கு பின்னர், கேரி கிரிஸ்டன் வழிகாட்டுதலின் படி 2011 உலகக் கோப்பையை இந்தியா முத்தமிட்டது. இந்திய நாட்டைச் சேர்ந்த பயிற்சியாளர்களும் நன்கு செயல்பட்டுள்ளனர். அதே சமயம் ஒரு சில தலைமை பயிற்சியாளர்கள் வெறும் ஓர் ஆண்டு பணியாற்றிய பிறகு விலகிக் கொண்டனர். அவர்களைப் பற்றி பின்வருமாறு பார்ப்போம்.

- Advertisement -

1. அனில் கும்ப்ளே (2016 – 2017)

கும்ப்ளே, இந்திய அணியின் தலைசிறந்த லெக் ஸ்பின்னர்களில் ஒருவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே 619 விக்கெட்டுகள் வீழ்தியுள்ளார். மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக ஒரே இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ஓர் ஆண்டு மட்டுமே செயல்பட்டார். அந்த ஒராண்டில், அவர் தலைமையின்கீழ் இந்தியா ஆடிய 13 டெஸ்ட்டில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்றுப்போனது. ஆனால் சில பிரச்சினைகளால் அவர் பதவியில் இருந்து விலகினார். தற்போது அனில் கும்ப்ளே, பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக இறக்கிறார்.

2. கபில் தேவ் (1999 – 2000)

இந்திய அணியின் மகத்தான வீரர், கபில் தேவ். இவரது வழிகாட்டுதலில் தான், இந்திய அணி முதன் முதலில் 1983ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. ஒரு வீரராக இந்திய அணிக்கு பணியாற்றிய பிறகு, 1999ம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.

- Advertisement -

கபில் தேவ்வின் தலைமையின்கீழ் ஆடிய இந்திய அணி, அவ்வாண்டு ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்காவில் அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. மேலும், மேட்ச் பிக்சிங் புகாரில் கபில் தேவ்க்கும் பங்கிருப்பதாக செய்திகள் வெளிவந்தன. பின்னர், அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

3. பி.எஸ்.பேடி (1990 – 1991)

இந்திய அணிக்காக விளையாடிய சிறந்த ஸ்பின்னர்களில் ஒருவர், பி.எஸ்.பேடி. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மேனஜராக இருந்து தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், இன்றும் அவர் தன்னுடைய அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

இந்திய அணியை பயிற்சி செய்த வீரர்களில், மிகவும் கண்டிப்பான பயிற்சியாளர் இவரே என்று கூறலாம். இந்திய அணி சிறப்பாக ஆடத் தவறினால், அதிக கோவம் அடைந்து அனைவரையும் திட்ட ஆரம்பித்து விடுவார். ஒரு முறை, தோல்வியை தழுவிய இந்திய வீரர்களிடம், உங்கள் அனைவரையும் கடலில் முக்கி விடுவேன் என்று ஆத்திரத்துடன் கத்தினார்.

4. மதன் லால் (1996 – 1997)

Madan Lal and Sachin

1983ல் இந்திய அணி உலகக் கோப்பை வெல்ல இவரும் முக்கிய பங்காற்றினார். பந்துவீச்சில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இவர் பயிற்சி அளித்த இந்திய அணி, பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றியை ரசித்தது.

இந்திய அணி தன்னுடைய சொந்த ஊரில், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்காவை அனைத்து ‌ஃபார்மட்டிலும் வென்றது. பின்னர், மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டது. எதிர்பார்க்காத வகையில், இந்திய அணி ஒரு சில தோல்விகளை சந்தித்தது. அத்தொடருக்கு பிறகு, மதன் லாலின் பதவிக்காலம் முடிந்தது.

5. சலீம் துரை (1980 – 1981)

இந்திய அணியின் ஐந்தாவது பயிற்சியாளர், சலீம் துரை. அக்காலத்தில் மேனஜர் என்று அழைப்பர். ஆப்கனிஸ்தான் நாட்டில் பிறந்த இவர், 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதிரடி ஆல்ரவுண்டரான சலீம், மிகப் பெரிய சிக்ஸ்சர்கள் அடிக்கும் திறன் கொண்டவர். இவர் ஓர் ஆண்டு இந்திய அணிக்கு பயிற்சி அளித்தார். பின்னர், அசோக் மான்கன்ட் இவரது பொறுப்பை ஏற்றார்.