நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த சூழ்நிலையில் சன் ரைசர்ஸ் அணியின் தொடர்ச்சியான தோல்வி குறித்து பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
சன்ரைசர்ஸ் அணியின் தொடர் தோல்விகள்
இந்த போட்டியை பொருத்தவரை முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் குவித்தது. சன்ரைசர்ஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் இந்த முறையும் விரைவாக ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் அந்த அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் நிதீஷ் குமார் ரெட்டி 31 ரன்கள் மற்றும் கம்மின்ஸ் 9 பந்துகளில் 22 ரன்கள் என ஓரளவு விளையாடினார்கள்.
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணி 17 ஓவர்களிலேயே 153 ரன்கள் குவித்து வெற்றி இலக்கை அடைந்தது. தனது ஐந்தாவது போட்டியில் விளையாடியிருக்கும் சன்ரைசர்ஸ் அணிக்கு இது தொடர்ச்சியான நான்காவது தோல்வியாக அமைந்துள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் இனி அதிக போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சன்ரைசர்ஸ் இருக்கும் நிலையில் அதன் பயிற்சியாளர் வெட்டோரி சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
நிலைமைகளை மதிப்பிட வேண்டும்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்த ஸ்டைல் ஆட்டம் எங்களுக்கு நன்றாக வேலை செய்யும் என்று நினைக்கிறேன். ஆனால் முக்கியமாக நாங்கள் நிலைமைகளை மதிப்பிட வேண்டும். அதை மதிக்க வேண்டும். எனவே இங்கு தான் நாங்கள் சில தவறுகள் செய்கிறோம் என்று நினைக்கிறேன். மேலும் எதிர் அணிகள் எவ்வளவு நன்றாக பந்து வீசுகின்றன என்பதையும் நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். சில நேரங்களில் முக்கிய விஷயங்களை எங்களால் செயல்படுத்த முடியவிலலை.
இதையும் படிங்க:இந்திய அணி செஞ்சதை மறக்க மாட்டேன்.. என்னால் அதை ஜீரணிக்கவே முடியல.. பின் இப்படித்தான் மீண்டு வந்தேன் – முகமது சிராஜ் பேட்டி
மேலும் பேட் கம்மனஸ் தனது வாழ்க்கையில் ஒருபோதும் பீதி அடைந்ததில்லை. எனவே அவரைப் போலவே நானும் இருக்கிறேன் என்று தான் நினைக்கிறேன். ஆனால் தொடர்ச்சியான நான்கு தோல்விகள் இந்த சீசனை எவ்வளவு கடினமாக்குகிறது என்பதை நாங்கள் நன்றாக அறிவோம். ஏனென்றால் கடந்த ஆண்டு நாங்கள் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தோம். எனவே அதிக எதிர்பார்ப்போடு இந்த சீசனுக்குள் வந்து தோல்விகளை சந்திப்பது நன்றாக இருக்காது” என்று பேசி இருக்கிறார்.






