“அவர் ரெண்டு வருஷமா ரொம்ப கடுமையா உழைச்சார்.. எனக்கு இதுதான் வேணும்!” – போட்டிக்கு பின் ரோஹித் சர்மா பேட்டி!

0
900
Rohit

இந்திய அணிக்கு நடப்பு ஆசியக்கோப்பை தொடர் நல்லவிதமாக ஆரம்பிக்கவில்லை. பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் போட்டியில் டாப் பார்டர்கள் முழுவதுமாக சொதப்ப, இந்திய அணி பேட்டிங் யூனிட் மீது அவநம்பிக்கை நிலவியது.

இதற்கு அடுத்து சிறிய அணியான நேபாள் அணிக்கு எதிராக இந்திய பவுலிங் யூனிட் 130 ரன்கள் விட்டுக் கொடுத்தது. இப்படி ஆரம்பித்த விதம் இந்திய அணிக்கு மோசமாகவே இருந்தது.

- Advertisement -

ஆனால் ஆசியக் கோப்பை இரண்டாவது சுற்றில் பாகிஸ்தானை எதிர்கொண்ட முதல் போட்டியில் இருந்து, இந்திய அணியின் மீதான அவநம்பிக்கை விமர்சனங்கள் குழப்பங்கள் எல்லாமே முடிவுக்கு வந்திருக்கிறது என்று கூறலாம்.

இன்று இரண்டாவது சுற்றில் இரண்டாவது போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி, இந்திய அணி ஆசியக்கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதிஇருக்கிறது. நடந்து முடிந்த இந்த போட்டியும் இந்திய அணியின் நம்பிக்கையை மிக அதிகரிப்பதாக இருக்கிறது

இந்திய அணி இந்த முறை 213 ரன்கள் வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ஆட்டமிழந்து, வந்து வீச்சாளர்களை நம்பி இரண்டாம் பகுதியில் களம் இறங்கி, இலங்கை அணியை 172 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து வென்றிருக்கிறது. இந்த புதிய சவாலில் இந்திய அணியின் பிரதான ஐந்து பந்துவீச்சாளர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். குறிப்பாக ஹர்திக் பாண்டியா இறுதி நேரத்தில் ரன் தராமல் அழுத்தத்தை ஏற்றி மிகச் சிறப்பாக பந்து வீசினார்.

- Advertisement -

வெற்றிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா
“இது மிக நல்ல ஆட்டமாக இருந்தது. இப்படியான ஆட்டம் எங்களுக்கு தேவையாகவும் இருந்தது. இதன் மூலம் எங்கள் விளையாட்டு பல அம்சங்களை நாங்கள் பரிசோதித்து சவால் செய்து கொண்டோம். நாங்கள் நிச்சயமாக இது போன்ற ஆடுகளங்களில் விளையாட விரும்புகிறோம். எங்களால் என்ன சாதிக்க முடியும்? என்று தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

ஹர்திக் பாண்டியா கடந்த இரண்டு வருடங்களாக தனது பந்து வீச்சில் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார். மேலும் அவர் தனது இரண்டாவது ஸ்பெல்லை எப்படி வீசினார் என்று பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது.

ஆடுகளம் கடைசி நேரத்தில் பேட்டிங் செய்வதற்கு கொஞ்சம் சிறப்பாக மாறியது. இதனால் இலக்கை எங்களால் தற்காத்துக் கொள்ள முடியாத நிலைதான் இருந்தது. இதனால் நாங்கள் ஒரு புறத்தில் அழுத்தத்தை வைக்க வேண்டியது இருந்தது.

குல்தீப் யாதவ் பந்துவீச்சு கடந்த ஒரு வருடமாக மிகச் சிறப்பாக இருக்கிறது. அவர் தன்னுடைய ரிதத்தில் நிறைய வேலை செய்திருக்கிறார். அவருடைய கடைசி பத்து போட்டிகளை எடுத்து பார்த்தால் நன்றாக தெரியும்!” என்று கூறியிருக்கிறார்!