“ஜெய்ஸ்வால் 171 அடிச்சிருக்கலாம்! ஆனால் இந்திய அணியில் அடுத்த வாய்ப்பு..” – ஹர்பஜன் சிங் கணிப்பு!

0
802

“171 ரன்கள் அடித்திருந்தும் 200 ரன்கள் அடிக்க முடியவில்லை என்றுதான் ஜெய்ஸ்வால் வருத்தப்பட்டிருப்பார். அதனால் அடுத்தடுத்த போட்டிகளில் இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கு பல கடின முயற்சிகளை எடுக்க வேண்டும்.” என்று அறிவுரை கூறியுள்ளார் ஹர்பஜன் சிங்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ஜெய்ஸ்வால் அறிமுகம் ஆனார். அறிமுகமான போட்டியிலேயே சதம் விளாசி பல்வேறு சாதனைகளை படைத்த இவர் 171 ரன்களுக்கு அவுட் ஆனார்.

- Advertisement -

171 ரன்களும் பல்வேறு சாதனைகளை படைப்பதற்கு வழிவகை செய்திருந்தாலும் 200 ரன்கள் அடிக்கும் வாய்ப்பை நழுவு விட்டார் என்று பலரும் கருதினர். இறுதியில் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியை இன்னிங்ஸ் மற்றும் 141 வித்தியாசத்தில் வென்றது. போட்டியில் ஆட்டநாயகனாக ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார்.

இன்றளவும் நிற்காமல் இவருக்கு பாராட்டு மழைகள் பொழிந்த வண்ணம் இருக்கின்றன. இந்திய அணியின் எதிர்காலமாக திகழ்ந்து பல்வேறு சாதனைகளை படைப்பார் என்கிற கணிப்புகளும் கூறப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தன்னுடைய கணிப்பை தெரிவித்துள்ளார் ஹர்பஜன் சிங்.

“சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான போட்டியிலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஜெய்ஸ்வால். அவரது திறமையில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்திய அணிக்கு இன்னும் பல ஆண்டுகள் விளையாடக் கூடியவராக தெரிகிறார். விளையாடுவதற்கு பல்வேறு வாய்ப்புகளும் கொடுக்கப்படும் என்றே உணர முடிகிறது. இருப்பினும் அறிமுகப் போட்டியில் 171 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்திருந்தாலும் 200 ரன்கள் அடிப்பதை தவறவிட்டோம் என்று நிச்சயம் வருத்தப்படுவார்.

- Advertisement -

இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டையும் இந்திய அணி வெற்றி பெறும் என்ற முடிவுகள் இப்போதே தெளிவாக தெரிகிறது. ஆகையால் இந்திய அணியினர் விக்கெட்டுகள் மற்றும் ரன்களை குவிப்பதற்கு வாய்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.” என்றார்.