“கடந்த சீசனில் எங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமான வீரர் அவர் , இந்த ஒரு ஓவரால் எதுவும் மாறப் போவதில்லை” – யாஸ்தயாளுக்கு ஆதரவாக பேசிய விஜய் சங்கர்!

0
292

16 வது ஐபிஎல் சீசனில் நேற்று நடைபெற்ற குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிரான போட்டி இந்த வருட ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் மிகச்சிறந்த ஆட்டமாக அமைந்திருக்கிறது . ஒரு ஓவருக்கு 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கொல்கத்தா அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

பரபரப்பான இந்த போட்டியில் முதலில் ஆடிய குஜராத் அணி தமிழக வீரர்கள் விஜய் சங்கர் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 24 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்தது . 25 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதீஷ் ராணா ஆகியோர் சிறப்பாக ஆடினர் .

- Advertisement -

அந்த அணி வெற்றியை நோக்கி முயற்சித்துக் கொண்டிருக்கும் வேளையில் குஜராத் அணியின் கேப்டன் ரஷீத் கான் ஹாட் ட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து ஆட்டத்தை குஜராத் அணியின் பக்கம் திருப்பினார் . ஒரு ஓவரில் 29 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் குஜராத் அணி தான் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் அதன் பிறகு யாஸ் தயால் வீசிய அடுத்த ஐந்து பந்துகளையும் 5 சிக்ஸர்களாக மாற்றி
சாதிக்க இயலுமா என்ற விஷயத்தை சாதித்து காட்டினார் ரிங்கு சிங்.

ரிங்கு சிங் இறுதிவரை ஆட்ட விளக்காமல் 21 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்தார். இந்தப் போட்டியில் அவர்தான் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார் . ஆறு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் இந்த ரன்களை அவர் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . அதிலும் 30 ரன்கள் இறுதி ஐந்து பந்துகளில் வந்தவை. இதற்கு முன்பாக குஜராத் அணியின் பேட்டிங்கின் போது விஜய் சங்கர் மிகச் சிறப்பாக ஆடி அரை சதம் எடுத்தார் அவர் 24 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இவரது அதிரடி ஆட்டமே குஜராத் அணி 200 ரண்களை கடக்க உதவியது .

இந்நிலையில் போட்டிக்கு பின் பேசிய விஜய் சங்கர் ” கடந்த வருடம் எங்கள் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவர் யாஸ் தயாள். சில போட்டிகளில் முக்கியமான ஓவர்களை வீசி அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த வரும் அவர்தான். ஒரு வீரரை ஒரு போட்டியின் ஒரு ஓவரை வைத்து முடிவு செய்து விட முடியாது . ஒவ்வொரு வீரருமே கடுமையான உழைப்பை கொடுத்து தான் ஐபிஎல் என்ற இந்த இடத்தை அடைந்திருக்கிறார்கள் அடைந்திருக்கிறோம்” என்று தெரிவித்தார் .

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையில் இது போன்ற விஷயங்கள் நடக்கக்கூடிய ஒன்றுதான் எல்லா வீரர்களுக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் இதுபோன்று நடக்கும் . ஒரு விளையாட்டு வீரராக அதை கடந்து தான் வந்தாக வேண்டும் நாங்கள் எல்லோரும் ஒரு அணியாக அவருக்கு பின்னால் நிற்கிறோம் . இந்த கடினமான காலத்தை அவர் கடந்து வர மனதளவிலும் எங்களால் முடிந்த உதவிகளை செய்து அவருக்கு உறுதுணையாக இருப்போம் என்று கூறி முடித்தார் விஜய் சங்கர்.