இந்திய கிரிக்கெட்

ஸ்ரேயாஸ் நான் பார்த்ததில் நீ சிறப்பான ஆள்.. இப்படி ஒரு கேட்ச்சை இதுவரை பார்த்ததில்லை – சச்சின் பாராட்டு

நேற்று ஹர்திக் பாண்டியா அடித்த பந்தை ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமான முறையில் கேட்ச் பிடித்தார். தான் நேரில் பார்த்ததில் இதுவே மிகச் சிறந்த கேட்ச் என சச்சின் டெண்டுல்கர் மிகவும் விரிவாக பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயர் இந்த கேட்ச் எடுத்த காரணத்தினால் மும்பை அணி 220 ரன்கள் எடுக்கும் வாய்ப்பை கோட்டை விட்டது. மேலும் மும்பை வீரர்கள் அமர்ந்திருந்த இடத்தில் அவர் இந்த கேட்ச் பிடித்த காரணத்தினால் அவர்கள் எல்லோரும் மிக அருகில் இதை பார்த்தார்கள்.

ஸ்ரேயாஸ் காட்டிய துல்லியம்

ஸ்ரேயாஸ் ஹர்திக் அடித்த அந்த பந்தை துரத்தும் போது பவுண்டரி லைன் எங்கே இருக்கிறது என்பதை பார்க்காமலே சரியாக கணக்கிட்டு இருந்தார். மேலும் பவுண்டரி லைனுக்கு வெளியே தாவி பிடித்துக்கொண்டே, உடல் காற்றில் இருக்கும் போதே வெளியில் இருந்த வீரரிடம் பந்தை சரியாக வீசினார்.

இந்த எல்லா விஷயங்களும் நொடியில் நடந்து முடிந்ததுதான் இதை அற்புதமானதாக மாற்றி இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறந்த கேட்ச் ஆக இது விருது பெறுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

சச்சின் பாராட்டு

இது குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறும்போது “ஸ்ரேயாஸ் ஐயர் எடுத்த கேட்ச் மிகவும் சிறப்பானதாக தெரிவதற்கு காரணம் அவருடைய உடல் திறமை மட்டும் இல்லை, அதில் இருந்த விழிப்புணர்வுதான் முக்கியமானது. பந்தின் வேகம் மற்றும் உயரம், பவுண்டரி லைன் எங்கே இருக்கிறது, நாம் அதற்கு பக்கத்தில் எங்கே இருக்கிறோம் என்பதையெல்லாம் துல்லியமாக கணக்கிட்டு, மேலும் எந்த நேரத்தில் தாவ வேண்டும் என்பதையும் துல்லியமாக செய்தார்”

இதையும் படிங்க : இந்திய டி20 அணியில் சூரியகுமார் நீக்கம்?.. ஸ்ரேயாஸ் படிதார் வைத்த செக்.. கம்பீர் அகர்கர் மோதல்.. வெளியான செய்திகள்

“பந்தை பிடித்த அவர் உடல் தரையை தொடுவதற்கு முன்பாகவே, பந்தை உடனடியாக சக வீரருக்கு எறிந்தார். மேலும் சக வீரர் எங்கே இருக்கிறார் என்பதையும் சரியாகப் பார்த்திருந்தார். இது எல்லாவற்றையும் ஒரு நொடி நேரத்தில் செய்வது அவர்னஸ், டைமிங், ஃபிட்னஸ் மற்றும் அவருடைய அமைதியான மனநிலையை காட்டுகிறது. அவர் எல்லாவற்றையும் சரியாக செய்தார். நான் நேரில் பார்த்த சிறந்த கேட்சிகளில் இதுவும் ஒன்று” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts