இந்திய டி20 அணியில் சூரியகுமார் நீக்கம்?.. ஸ்ரேயாஸ் படிதார் வைத்த செக்.. கம்பீர் அகர்கர் மோதல்.. வெளியான செய்திகள்

0
33
Shreyas

இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் மட்டும் இல்லாது ஒட்டுமொத்தமாக அணியிலிருந்தும் சூரியகுமார் யாதவ் நீக்கப்படலாம் என செய்திகள் தெரிவிக்கிறது.

தற்போது சூரியகுமார் யாதவ் டி20 உலகக் கோப்பையை வென்று வந்த இந்திய கேப்டனாக இருக்கிறார். இருந்தபோதிலும் இந்த அதிரடி மாற்றத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

கம்பீர்-அகர்கர் மோதல்

இந்திய டி20 அணிக்கு கம்பீர் ஸ்ரேயாஸ் ஐயர் வேண்டும் என்று கேட்டதாகவும் ஆனால் தேர்வுக்குழு தலைவர் அகர்கர் எதிர்கால கேப்டனாக கில்லை கொண்டுவர வேண்டும் என்று தேர்வு செய்ததாகவும், இந்த விஷயத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் சூரியகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்புக்கு வந்த பிறகு அவருடைய பேட்டிங் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. கடைசியாக நியூசிலாந்து டி20 தொடரில்தான் அவர் சிறப்பாக விளையாடியிருக்கிறார். மேலும் முக்கிய போட்டிகளில் ரன் எடுக்காமல் வெளியேறுவது அவருடைய வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் 35 வயதையும் தொட்டுவிட்டார்.

- Advertisement -

ஸ்ரேயாஸ் படிதார் போட்டி

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு கேப்டனாக இருந்து வரும் ஸ்ரேயாஸ் மற்றும் படிதார், கேப்டன் பொறுப்பின் சுமையையும் தாண்டி மிக அபாரமாக விளையாடுகிறார்கள். எனவே சூரியகுமாரின் இடத்தில் இருவரில் ஒருவர் இடம்பெற வேண்டும் என்பது கட்டாயமாக மாறி உள்ளது.

இதையும் படிங்க: தனிப்பட்ட வீரர்கள் தப்பு பண்றாங்களானு கண்டுபிடிக்கணும்.. வெற்றிக்கு திரும்ப 3 விஷயத்தை யோசிக்கணும் – ஹர்திக் பாண்டியா பேச்சு

அடுத்த டி20 உலக கோப்பை 2028 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடக்கிறது. மேலும் அதே ஆண்டு ஒலிம்பிக் நடக்கிறது. இதுவரையில் விளையாட சூரியகுமார் யாதவ் விருப்பம் தெரிவித்திருக்கிறார். ஆனால் இன்னும் மூன்று வருடங்களுக்கு அவரைக் கொண்டு செல்ல முடியாது என்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் உணர்ந்து கொண்டுள்ளதாகவும், அதனால் அவரை நீக்குவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -