அவர் கயானாவில் விளையாடினார்.. பந்து ஃப்ளோரிடாவில் இருந்தது – இறங்கி அடிக்கும் இந்திய முன்னாள் வீரர்!

0
522
Indvswi2023

நேற்று அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் அபாயகரமான பேட்ஸ்மேனான நிக்கோலஸ் பூரணை குல்தீப் யாதவ் அபாரமாக ஒரு ரன்னில் வெளியேற்றினார்.

- Advertisement -

மேலும் அதே ஓவரில் வெஸ்ட் இண்டிஸ் அணியின் கேப்டன் ரோமன் பவலையும் ஸ்லீப்பில் கில் இடம் வைத்து வெளியேற்றினார். கூகுளியாக வீசப்பட்ட பந்தை கையில இருந்து கணிக்க தவறி ரோமன் பவல் பரிதாபமாக தடுமாறி ஆட்டம் இழந்தார். இரு அபாயகரமான பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை ஒரே ஓவரில் வீழ்த்தியதால் இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கினார் குல்தீப் யாதவ்.

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா “ரோமன் பவலுக்கு வந்த பந்து அவரை ஏமாற்றியது. அவர் குல்தீப் வீசிய கூகுளி பந்தில் ஏமாந்தார். மேலும் அவர் தவறான லைனில் சிக்கிக் கொண்டார். அவர் அந்தப் பந்தை கயானாவில் விளையாடினார் ஆனால் பந்து ஃப்ளோரிடாவில் இருந்தது. அகமதாபாத் போன்ற ஒரு மைதானத்தில் ஸ்லீப்பில் நின்று கொண்டிருந்த கில் எந்த தவறும் செய்யவில்லை.

டி20 கிரிக்கெட் நிறைய விஷயங்களை கொடுத்திருக்கிறது. ஆனால் பேட்டர்களிடம் இருந்து ஒரு சில விஷயங்களை எடுத்து விட்டது. தற்சமயத்தில் பேட்ஸ்மேன்களால் பந்துவீச்சாளரின் கையில் பந்து இருந்து வரும் பொழுது அது எப்படியான பந்து என்று அவர்களால் கணிக்க முடிவதில்லை. இதன் காரணமாக இப்படியான கூக்ளி பந்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.

- Advertisement -

இந்திய அணியினர் பூரன் மனதுடன் விளையாடுவது போல் தெரிகிறது. அவருக்காக குல்தீப் யாதவை பொறுமையாக வைத்திருந்து கொண்டு வருகிறார்கள். உண்மையில் இது வெளியிடுவதற்கான செய்தி. குல்தீப் வந்தவுடன் ஒரு ஃபீல்டர் நேராக தூரமாக போய் நிற்பார் என்று தெரியும். அப்படி இருக்கும் பொழுது எப்படி விளையாட வேண்டும்?

அவர் அவரை ரொட்டேட் செய்து விளையாட வேண்டும் இல்லை அவரை விட்டு மற்றவர்களை தாக்கி விளையாட வேண்டும். ஆனால் நிக்கோலஸ் பூரணிடம் ஒரே ஒருமுறைதான் இருக்கிறது. அவர் எடுத்ததும் ஐந்தாவது கியரில் விளையாடுவதற்கு செல்கிறார். கடந்த முறை ஸ்டெம்பிங் ஆனார். இந்த முறை லாங் ஆனில் கேட்ச் ஆனார்!” என்று கூறியிருக்கிறார்.

தற்பொழுது ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் என சம நிலையில் இருக்கிறது. இந்தத் தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது டி20 போட்டி இன்று ஃப்ளோரிடா மாகாணத்தில் அதே மைதானத்தில் நடக்கிறது. தொடரை யார் கைப்பற்றுவார்கள் என்று பார்ப்போம்!