வெற்றியில் அவரது பங்கு மிகப் பெரியது ; இளம் தமிழக வீரரைப் புகழ்ந்து பேசியுள்ள குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா

0
3040
Hardik Pandya Gujarat Titans

குஜராத் பஞ்சாப் அணிகள் மும்பையின் ப்ரோபோர்ன் மைதானத்தில் மோதிய நேற்றைய பரபரப்பான ஐ.பி.எல் ஆட்டத்தில், வெற்றிக்கு கடைசி இரண்டு பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட, குஜராத் அணியின் ராகுல் திவாட்டியா அசத்தலாய் இரண்டு சிக்ஸர்கள் அடித்து அணியை வெற்றிப்பெற வைத்திருக்கிறார்.

இந்த ஆட்டத்தில் மிகச்சிறப்பாக 59 பந்துகளில் 96 ரன்கள் அடித்த சுப்மன் கில்லின் ஆட்டம் ஒருபுறத்திலும், கடைசி இரு பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் அடித்த திவாட்டியாவின் மூன்று பந்து ஆட்டம் ஒருபுறத்திலும் இருக்க, இவை இரண்டையும் இணைத்து, அணிக்கான வெற்றியின் கண்ணியாக இருந்தது, இன்றைய போட்டியில் அறிமுகமான தமிழகத்தின் சாய் சுதர்சன் சுப்மன் கிலைலுடன் அமைத்த 101ரன் பார்ட்னர்ஷிப் ஆட்டம்தான்!

- Advertisement -

உலகின் தற்போதைய சிறந்த பாஸ்ட்-பவுலர்களில் ஒருவரான ரபாடாவை தான் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார். ஸ்பின்னை மயங்க் அகர்வால் கொண்டுவர, ராகுல் சஹரின் முதல் ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார். ஓடியன் தாமஸ் மணிக்கு 140கி.மீ வேகத்தில் வீசிய பந்தை அனாசயமாக கவர்-டிரைவ் ஆடினார். திடீரென்று ரன் பிரசர் சிறியதாய் உருவாக, மீண்டும் ரபாடாவின் பந்தில் டீப்-லாங்-ஆனில் தூக்கி பவுண்டரி அடிக்கிறார்.

அவரது 30 பந்துகளில் 35 ரன் ஆட்டத்தில் பதட்டமே கிடையாது. ஒருமுனையில் சுப்மன் கில்லுக்கு ஒத்துழைப்புக்காக நின்றுகொண்டு, அதேவேளையில் தேவைக்கு பவுண்டரிகள் ஆடி, பவுண்டரிகள் வந்தால் சிங்கிள் ஆடி, இப்படி அவரது ஆட்டம் நுணுக்கமாகவும், பொறுப்பாகவும், புத்திசாலித்தனமாகவும் இருந்தது.

- Advertisement -

சரி யாரிந்த சாய் சுதர்சன்?
இவரது தந்தை பரத்வாஜ் தெற்காசிய பெடரேசன் போட்டியில் தடகளத்தில் இந்தியாவிற்காகக் கலந்துகொண்டவர். தாய் மாநிலத்திற்காக கைப்பந்து விளையாடிவர். இவரது பூர்வீகவே விளையாட்டோடுதான். இவரது பேட்டிங் டச், டைமிங் வைத்துப் பார்க்கும் பொழுது, குறைந்தபட்சம் ஐ.பி.எல்-ல் குஜராத் அணியின் நிரந்தர வீரராகவாவத தொடர்வாரென்று தெரிகிறது.

ஆட்டம் முடிந்த பிறகு இவரைக் குறித்துப் பேசிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா “இந்த வெற்றிக்கான பெரிய அங்கீகாரம் அவர் பங்குகொண்ட பார்ட்னர்ஷிப்பிற்குதான். அதுதான் எங்களை ஆட்டத்திற்குள் வைத்திருந்தது” என புகழ்ந்து கூறியிருக்கிறார்!

- Advertisement -