ரைஷிங் புனேல தோனி கூட ஆடிருக்கேன், ஆனால் சிஎஸ்கேல தோனி கூட ஆடும்போது எனக்கு இப்படிப்பட்ட மரியாதை தான் கிடைத்தது – பென் ஸ்டோக்ஸ் பேட்டி!

0
83004

ரைசிங் புனே அணியில் ஏற்கனவே தோனியுடன் விளையாடி இருக்கிறேன். இப்போது சிஎஸ்கே அணியில் தோனியுடன் விளையாடும் பொழுது கிடைக்கும் மரியாதை எப்படி இருக்கிறது? என்று பேசி உள்ளார் பென் ஸ்டோக்ஸ்.

இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் எடுக்கப்பட்டார். 16.25 கோடி ரூபாய் கொடுத்து எடுக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்டோக்ஸ் எப்பேர்ப்பட்ட ஆல்ரவுண்டர் என்பதை பலரும் அறிவோம்.

- Advertisement -

ஆகையால் இந்த வருடம் ஸ்டோக்ஸ் மீது எதிர்பார்ப்பு நிலவியது. துரதிஷ்டவசமாக ஐபிஎல் தொடருக்கு முன்பு அவர் உரிய உடல்தகுதியில் இல்லை என்பதால் முழுமையாக பந்துவீச முடியாது என்று தெரியவந்தது.

2 லீக் போட்டிகளில் ஆடினார். அதன் பின்னர் மீண்டும் காயம் ஏற்பட்டு வெளியில் அமர்த்தபட்டார் கடைசி லீக் போட்டிக்கு முன்பு நாடு திரும்பிவிட்டார். அயர்லாந்து அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் தொடர் மற்றும் ஜூன் 16ஆம் தேதி துவங்கும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் வருகிறது. இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக ஸ்டோக்ஸ் இருப்பதால் முன்னரே சென்றுவிட்டார்.

இந்த வருடம் ஸ்டோக்ஸ் விளையாடவில்லை என்றாலும், அடுத்தடுத்த சீசன்களில் இவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதை ரசிகர்கள் பலரும் அறிவோம். மேலும் சிஎஸ்கே அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டதால் ஸ்டோக்ஸ் இல்லாதது விமர்சனத்திற்கு உள்ளாகவில்லை.

- Advertisement -

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடியது மற்றும் சில வருடங்களுக்கு முன்பு இதே பயிற்சியாளர்கள் குழு மற்றும் தோனியின் கேப்டன் பொறுப்பில் ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ஸ் அணிக்காக பென் ஸ்டோக்ஸ் விளையாடினார். தனது சமீபத்திய பேட்டியில் இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை மற்றும் வித்தியாசம் ஆகியவற்றை பற்றி பேசினார். ஸ்டோக்ஸ் பேசியதாவது:

“ஐபிஎல் கிரிக்கெட்டில் சிஎஸ்கே அணி எத்தகைய வரலாறை வைத்திருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம். எனக்கும் நன்றாக தெரியும். ஏற்கனவே இதே பயிற்சியாளர் மற்றும் டிரெஸ்ஸிங் ரூம் பணியாளர்களுடன் ரைசிங் புனே அணிக்காக விளையாடியபோது இருந்திருக்கிறேன். இப்போது மொயின் அலி இருக்கிறார். ஆகையால் மீண்டும் இவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஆவலோடு இருந்தேன். மகிழ்ச்சியாகவும் இருந்தது. இவை அனைத்திற்கும் மேலாக தோனியுடன் இணைந்து பணியாற்றும் உணர்வை சொல்லி தெரியவேண்டாம். கூடுதல் மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் கொடுத்தது.

தோனி, வீரர்களுக்கு மத்தியில் எப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்படுத்த விரும்புவார் என்பதை எனக்குத் தெரியும். ரைசிங் புனே புதிதாக துவங்கப்பட்ட அணி. ஆனால் சிஎஸ்கே அணியில் எப்படிப்பட்ட சூழல் இருக்கும் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும் தோனி இருப்பதால் அவர் எப்படிப்பட்ட சூழலை வைத்துக் கொள்வார் என்பதை தெரிந்து ஆவளோடு இருந்தேன்.

உங்கள் அணியில் தோனி இருக்கும் பொழுது ஒவ்வொரு போட்டியும் ஹோம் கிரவுண்டில் ஆடுவதுபோல சப்போர்ட் கிடைக்கும். அதை அனுபவிப்பதும் சிறப்பான உணர்வாக இருந்தது. மேலும் வெளி மைதானங்களிலும் இப்படிப்பட்ட ஹோம் சப்போர்ட் கிடைப்பதை ஆச்சரியமாக உணர்ந்தேன். சிஎஸ்கே அணியில் உங்களுக்கு கிடைக்கும் மரியாதை வேறு எங்கேயும் பார்த்திட முடியாது. இந்த சீசன் எதிர்பார்ப்பிற்கும் மேல் சிறப்பாக இருந்தது.” என்றார்