டீம்ல இருந்து வெளியே அனுப்ப போறது இவரை இல்லை இவரைத்தான்! – உண்மையை உடைத்த சஞ்சய் பாங்கர்!

0
4197
ICT

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றுரோடு தோற்று அதிர்ச்சிகரமாக வெளியேறி வந்தது. அந்தத் தொடரில் வாங்கிய மரண அடி இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளையும் அதன் தொடர்ச்சியாக கேப்டன் மற்றும் பயிற்சியாளர் மாற்றங்களையும் உண்டாக்கியது!

புதிதாக கேப்டன் பொறுப்புக்கு வந்த ரோகித் சர்மா, பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்த ராகுல் டிராவிட் இருவரும், தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பைக்காகவும் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பைக்காகவும் புதிய இந்திய அணியை கட்டி எழுப்பும் வேலையை ஆரம்பித்து செய்தார்கள். ஆனால் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அரை இறுதியில் இங்கிலாந்து அணியிடம் படுதோல்வியை சந்தித்து வெளியேறியது,

- Advertisement -

இதை அடுத்து தற்போது மீண்டும் வெள்ளைப்பந்து இந்திய அணியை மாற்றி அமைக்கும் வேலையில் ஈடுபட்டு உள்ளார்கள். இதன் ஒரு பகுதியாக டி20 இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும் ஒருநாள் போட்டி அணிக்கு துணை கேப்டன் ஆகவும் கொண்டுவரப்பட்டு இருக்கிறார்.

மேலும் டி20 இந்திய அணியில் கே.எல்.ராகுல் ரோகித் சர்மா விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இடம்பெறவில்லை. இதேபோல் ஒருநாள் போட்டி அணியில் கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பன்ட் இடம் பெறவில்லை.

இதையெல்லாம் வைத்து பார்த்த பொழுது தனது திருமணத்திற்காக சென்றுள்ள கே எல் ராகுலுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது போலவும், ரிஷப் பண்ட்டை வெள்ளை பந்து இந்திய அணிகளிலிருந்து நீக்கியது போலவும் காட்சியானது. இடது கை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் இசான் கிசானை இரு அணிக்குள்ளும் கொண்டு வந்ததால் இந்த கருத்து உறுதியாகவும் தெரிந்தது. ஆனால் தற்போது இதற்கெல்லாம் மாற்றான ஒரு புதிய கருத்தை ஆர் சி பி அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்!

- Advertisement -

இது பற்றி அவர் கூறும் பொழுது
” ஷிகர் தவான் இல்லாத நிலையில் ரோஹித் சர்மாவுடன் யார் ஓபன் செய்யப் போகிறார்கள் என்பதில் எந்த குழப்பமும் இல்லை. பங்களாதேஷ் உடனான ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த இசான் கிஷான் தான் துவங்குவார் என்பது உறுதி. அதுமட்டுமின்றி இந்தியாவில் தென் ஆப்பிரிக்க அணியுடன் நடந்த ஒருநாள் போட்டி தொடரில் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர்களை இஷான் கிஷான் விளையாடிய விதம் மிகப் பிரமாதமாக இருந்தது. அவர் ரோஹித் சர்மா உடன் மேலே நீண்ட காலத்திற்கு துவக்க வீரராக ஆரம்பிக்கப் போகிறார்!” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” இஷான் கிஷான் துவக்க வீரராக களமிறங்குவது உறுதியானதால். கேஎல் ராகுல் பிளேயிங் லெவனில் இடம் பெற கடுமையாக போராட வேண்டி இருக்கும். மேலும் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக உயர்த்தப்பட்டு இருப்பதும் இதையே சொல்கிறது!” என்று கூறியுள்ளார்!

ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை விளையாடும் இந்திய அணியில் ரிஷப் பன்டுக்கு பதிலாக விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் இடம் பெறலாம் என்கின்ற ஒரு கருத்து இருந்தது. ஆனால் துவக்க வீரராக இசான் கிசானும் நடு வரிசையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்டும் இடம் பெற வாய்ப்புகள் அதிகரித்து இருப்பதாக தெரிகிறது. எனவே கே எல் ராகுல் உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெறாமல் போனாலும் ஆச்சரியம் இல்லை!