சச்சினுக்கு அடுத்து இவர் விளையாடத்தான் அதிகம் எதிர்பார்த்து இருந்தேன் – கவாஸ்கர் கருத்து!

0
364
Gavaskar

சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு உம்ரான் மாலிக் இந்திய அணிக்காக ஆடுவதை பார்க்கத்தான் மிகவும் ஆவலாக இருந்தேன் என்று இந்திய அணியின் லெஜண்டரி கிரிக்கெட்டரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சுனில் கவாஸ்கர் தெரிவித்து இருந்தார். இது உம்ரான் மாலிக்கிற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம் ஆகும் .

இந்திய அணியின் இளம் வேக பந்துவீச்சாளர் ‘உம்ரான் மாலிக்’ இவர் தனது புயல் வேக பந்துவீச்சினால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியவர் 2022 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசியதன் மூலம் உலக கிரிக்கெட் ரசிகர்களையும் கிரிக்கெட் விமர்சகர்களையும் தன் பக்கம் திருப்பினார். இவரது அசாத்தியமான வேகத்தினால் விரைவிலேயே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisement -

சர்வதேச போட்டிகளில் நிறைய வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் தன்னுடைய அதிவேகப்பந்துவீச்சின் மூலம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி இருக்கிறார். இவர் பற்றி கருத்து தெரிவித்த ‘சுனில் கவாஸ்கர் “உம்ரான் மாலிக்கின் வேகம் அசாத்தியமானது. இவரைப் போன்ற ஒரு பந்துவீச்சாளரைஇந்தியாவில் காண்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவர் ஆட்டத்தின் போது பந்து வீசுவதை காண்பதற்கு உற்சாகமாக இருக்கிறது”.

“இந்திய அணியின் ‘மாஸ்டர் பிளாஸ்டர் ‘ “சச்சின் டெண்டுல்கருக்கு” பிறகு இந்திய அணிக்காக ‘உம்ரான் மாலிக்’ ஆடுவதை தான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தேன் அவர் தற்போது தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் நாட்கள் செல்ல செல்ல அனுபவங்களை பெற்று ஒரு சிறந்த பந்துவீச்சாளராக இந்திய அணிக்கு இருப்பார்” என்றும் கூறினார்.

அயர்லாந்து தொடருக்குப் பிறகு நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் இடம் பெற்ற உம்ரன் மாலிக் t20 போட்டிகளில் விளையாடவில்லை அதன் பிறகு நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில் இரண்டு ஆட்டங்களில் ஆடி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார் .

- Advertisement -

தற்போது பங்களாதேஷில் நடைபெற்று வரும் ஒரு நாள் போட்டிகளில் முகமது சமி காயத்தில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்ட உம்ரன் மாலிக் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆடினார் . அந்த போட்டியின் ஆரம்ப கட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய அவர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் . இந்தப் போட்டியில் பங்களாதேஷ் வீரர் சாந்தோவின் விக்கெட்டை கிளீன் போல்ட் முறையில் வீழ்த்தினார். 151 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்பட்ட பந்து புயல் போல வந்து ஸ்டம்புகளை சிதறவிட்டது ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றது.