விராட் கோலி ரொம்ப டேஞ்சர்; ஆனால் அப்படியொரு தப்பை கண்டிப்பாக செய்வார் என வச்சகண்ணை எடுக்கமா பத்துகிட்டே இருந்தேன் – மேட்ச்சை மாற்றிய கேட்ச் எடுத்த ஸ்மித் பேட்டி!

0
3448

“விராட் கோலி டேஞ்சரான வீரர். கண்டிப்பாக அவர் இதுபோன்ற தவறை செய்வார் கேட்ச் எடுக்கலாம் என்று விடாமல் காத்துக் கொண்டிருந்தேன்.” என போட்டி முடிந்த பிறகு ஸ்டீவ் ஸ்மித் பேட்டி அளித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதிபெற்று கடந்த 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை விளையாடின. முதல் நாள் ஆட்டத்தில் இருந்து இந்திய அணி தடுமாற்றம் கண்டு வந்தது.

- Advertisement -

முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 173 ரன்கள் பின் தங்கியிருந்தது. இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலியா அணி 443 ரன்கள் முன்னிலை பெற்றது. 444 ரன்கள் என்னும் இலக்கை துரத்திய இந்திய அணி 234 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது. 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியையும் தழுவியது.

தொடர்ச்சியாக இரண்டாவது முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரை வந்து கோப்பையை வெல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளது இந்திய அணி. அதேநேரம் ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு வந்து கோப்பையை வென்றிருக்கிறது. இந்த தருணம் குறித்து பகிர்ந்து கொண்ட ஸ்டீவ் ஸ்மித் பேசுகையில்,

“இது எங்களது அணிக்கு மிகப்பெரிய சாதனை. கடந்த இரண்டு வருடங்களாக பல முன்னணி அணிகளுடன் எதிர்கொண்டு சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தியதற்கு கிடைத்த பலனாக பார்க்கிறேன். அதேபோல் இந்திய அணியும் பல போராட்டத்திற்கு பிறகு இங்கே வந்திருப்பதை உணர்கிறேன். நாங்கள் போட்டியின் முதல் நாளில் இருந்தே நல்ல பொசிஷனுக்கு வந்து விட்டோம். இதற்கு முக்கிய காரணம் டிராவிஸ் ஹெட் வெளிப்படுத்திய சிறந்த கிரிக்கெட் தான். அதன் பிறகு நாங்கள் எந்த வகையிலும் பின்னடைவை சந்திக்காமல் ஆட்டத்தை எங்களது கண்ட்ரோலில் வைத்திருந்தோம்.

- Advertisement -

இரண்டாவது இன்னிங்சில் விராட் கோலி களத்தில் இருந்தபோது சற்று தயக்கமாக இருந்தது. ஏனெனில் சேசிங்கில் அவர் எவ்வளவு பெரிய ஸ்கோர் ஆக இருந்தாலும் நின்று விளையாட கூடியவர். சற்று ஆபத்தானவர் என்று உணர்ந்திருந்தேன். காலையில் போலண்ட் மிகச் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அதன் பலனாகவே விராட் கோலியின் விக்கெட் கிடைத்தது. அவர் ஏதாவது ஒரு சில ஓவரில் வெளியே செல்லும் பந்தை கண்டிப்பாக அடிப்பார் என காத்திருந்தேன். சரியான நேரத்தில் அவரது விக்கெட்டை எடுத்ததும் நம்பிக்கை வந்தது. மேலும் எதிர்பார்த்தபடியே அவரது கேட்ச் அமைந்தது எங்களது வேலையையும் எளிதாக்கிவிட்டது.” என்றார்.