“இந்திய அணியில் இவருக்கு சுயநலமே கிடையாது.. இந்த காலத்துல இவர மாதிரி பார்க்க முடியாது” – அஸ்வின் வெளியிட்ட முக்கியமான கருத்து!

0
1500
Ashwin

தற்போது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் பந்துவீச்சு துறையில் ஆப் ஸ்பின் என்கின்ற வகையையே வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகம் விலக்கி வைத்திருக்கிறது!

தற்போது உலகின் தலைசிறந்த ஆப் ஸ்பின் பவுலர் ரவிச்சந்திரன் அஸ்வின் நல்ல உடல் தகுதியுடன், நல்ல செயல் திறனுடன் இருக்கும் போதே, அவருக்கான வாய்ப்புகள் பல வகைகளில் பல இடங்களில் மறுக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணியில் அவருக்கான இடம் இல்லை என்றாலும் கூட, அவர் இந்திய அணியின் வெற்றி குறித்தும், இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றுவது மிகவும் முக்கியம் என்றும் பல கருத்துக்களை கூறி வருகிறார்.

இதில் இந்திய அணியின் ஒரு குறிப்பிட்ட வீரர் எப்படி ஆனவர்? அவர் எவ்வளவு சுயநலமற்றவர்? அணிக்காக எப்படி அணியின் வீரராக இயங்கக் கூடியவர்? என்று அவருடன் ஆன தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்.

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “நாங்கள் வெஸ்ட் இண்டீசில் இருந்த பொழுது இஷான் கிசானுக்கு பிறந்தநாள் வந்தது. அப்பொழுது நாங்கள் ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது, அவர் வண்ணமயமான உடை அணிந்து கொண்டு தங்க சங்கிலி போட்டு கொண்டு வந்தார்.

- Advertisement -

அப்பொழுது ஒரு ஐந்தாறு டேபிள்களில் இந்திய அணி ஊழியர்கள் என நிறைய பேர் நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சாப்பிட்டு முடித்து நாங்கள் கட்டணத்தை செலுத்த சென்ற பொழுது, எங்கள் கட்டணம் ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டதாகவும், அதை இஷான் கிஷான் செலுத்தி விட்டதாகவும் கூறினார்கள். இன்றைய நாட்களில் இப்படிப்பட்ட தன்னலமற்ற மனிதரைப் பார்ப்பது கடினம்.

இஷான் கிஷான் அசாதாரணமான டீம்மேன் என்பது வெளியில் தெரியாத இன்னொரு விஷயம். அவர் விளையாடும் அணியில் இல்லை என்றால் தண்ணீர் கொண்டு வருபவராக இருப்பார். அந்த வேலையை அவர் அவ்வளவு சிரத்தையாக செய்வார். வீரர்களுக்கான கிளவுஸ் மற்றும் பேட் என்று எல்லாவற்றையும் தயாராக வைத்துக் கொள்வார். மேலும் தண்ணீர் கொண்டு வரும் பொழுது தண்ணீரோடு சேர்த்து அவர் பாசிட்டிவையும் தந்து விட்டுப் போவார்.

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் அந்த அணியின் இடது கை வீரர் ஒருவருக்கு ஓவர் த விக்கெட்டில் வந்து பந்து வீசிக் கொண்டிருந்தேன். விக்கெட் கிடைக்காததால் தொடர்ந்து மாற்றி மாற்றி வந்து பந்து வீசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது இஷான் கிஷான் என்னிடம், உங்கள் பந்துவீச்சை என்னாலும் கணிக்க முடியாது, நீங்கள் கோணத்தை மாற்றிக் கொண்டே இருங்கள் அவர் அவுட் ஆகிவிடுவார் என்று கூறினார். அதேபோல் அந்த வீரர் அவுட் ஆனார்.

அப்பொழுது என்னிடம் வந்த இஷான் கிஷான், இத்தனை நாள் உங்களை விளையாடும் எனக்கே விளையாட முடியவில்லை, அறிமுக வீரரான இவரால் எப்படி விளையாட முடியும் என்று கூறினார்!” என்று சுவாரசியமான விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார்!