தோனியை விட இவருக்குதான் பவர் அதிகம் ; நாங்க பயிற்சியில பார்க்கிறோம் ; சிஎஸ்கே பேட்டிங் கோச் மைக் ஹசி!

0
4793
Hussey

சென்னை அணி ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மூன்று அல்லது நான்கு வீரர்களுக்கு ஏலத்தில் போகும், அதில் யார் கிடைத்தாலும் அவர்களை தங்களுக்குத் தேவையானபடி மாற்றிச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும்!

மற்ற அணிகளுக்குச் சரியாக விளையாடாத வீரர்கள் கூட சென்னை அணிக்கு வந்தால் மிகச் சிறப்பாக செயல்படுவார்கள்.

- Advertisement -

இதற்கு மிக முக்கியக் காரணம், குறிப்பிட்ட வீரரின் திறமையை அறிந்து அவருக்கு எந்த இடத்தை வழங்கினால் சரியாக இருக்குமோ அதைத் தருவதோடு, அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள முழு சுதந்திரத்தையும் விளையாடுவதற்கு வாய்ப்பையும் தருவார்கள்.

இந்த வகையில் இந்த முறை சென்னை அணியில் சிவம் துபே முக்கியமான அதிரடி வீரராக மாறி இருக்கிறார். 10 போட்டியில் 9 இன்னிங்ஸில் 290 ரன்களை 156 ஸ்ட்ரைக்ரேட்டில் அடித்திருக்கிறார். இதில் மூன்று அரைசதங்களும் அடங்கும்.

2019 ஆம் ஆண்டு 5 கோடிக்கு பெங்களூர் அணியால் வாங்கப்பட்ட அவர் அடுத்த ஆண்டும் அந்த அணிக்காக விளையாடினார். ஆனால் எதிர்பார்ப்புக்கு விளையாடவில்லை. 2021 ஆம் ஆண்டு 4.40 கோடிக்கு ராஜஸ்தான் வாங்கியது. ஆனால் அவர்கள் அடுத்த ஆண்டு அவரை திருப்பிக்கொடுத்து விட்டார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்த ஆண்டு சென்னை நான்கு கோடிக்கு வாங்கி அவரை மிகச் சிறப்பாக பயன்படுத்தியதோடு, மிக முக்கியமான வீரராகவும் அவரை மாற்றி, அவருக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி இருக்கிறது.

சிவம் துவை பற்றி சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி கூறும் பொழுது “அவர் ஒரு தனித்துவமான திறமைசாலி. பவுண்டரி லைனுக்கு வெளியே பந்தை அடிக்கும் அவரது திறமை அற்புதமானது. அவருக்கு அபாரமான பவர் இருக்கிறது. நாங்கள் இதை பயிற்சியில் பார்க்கிறோம்.

இதில் உண்மையில் முக்கியமான விஷயம் அணியில் அவருடைய ரோல் என்ன என்கின்ற தெளிவுதான். ஆனால் இந்தத் தெளிவு எங்களிடம் கடந்த ஆண்டும் இந்த ஆண்டு தொடக்கத்திலும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஸ்டீபன் பிளமிங் மற்றும் எம்.எஸ்.தோனி இருவரும் சிவம் துபே விளையாடும் விதத்தைப் பார்த்ததில், அவருக்கு என்ன மாதிரியான ரோல் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்கள். சிவம் துபே மிகவும் திறமையானவர்; எந்த நிலைமைகளில் எப்படி விளையாட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!