நியூசிலாந்து தொடரில் கில்லுக்காக விராட் கோலி இந்த தியாகத்தை செய்ய வேண்டும், ராயுடுவிற்கும் செய்திருக்கிறார் – சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து!

0
498

நியூசிலாந்து ஒருநாள் தொடரில் விராட் கோலி ஒரு தியாகத்தை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் சஞ்சய் மஞ்ரேக்கர்.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஜனவரி 18ஆம் தேதி முதல் விளையாடுகிறது. காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலக்கியுள்ளார். அவருக்கு பதிலாக ரஜத் பட்டிடார் உள்ளே வந்திருக்கிறார்.

- Advertisement -

அதேபோல் ஒருநாள் தொடரில் சொந்த காரணங்களுக்காக கேஎல் ராகுல் இடம் பெறவில்லை. நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்கள் இந்திய அணிக்கு காலியாக இருக்கின்றன. அந்த இடத்திற்கு அதிகபட்சம் இஷான் கிஷன் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் உள்ளே எடுத்துவரப்படுவர்.

இஷான் கிஷன் துவக்க வீரராகவும், கில் நம்பர் 3 இடத்திலும், விராட் கோலி நான்காவது இடத்திலும் களமிறங்க வேண்டும். இதற்கு முன்னரும் விராட் கோலி இதுபோன்று செய்திருக்கிறார். நியூசிலாந்து தொடரிலும் இந்த தியாகத்தை செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் சஞ்சய் மஞ்ரேக்கர்.

“இந்திய அணியின் பேட்டிங் வரிசை சிக்கலாக இருக்கிறது. நான் இதற்காக ஒரு அறிவுரை கூற உள்ளேன். இதை கேட்டால் நிச்சயம் விராட் கோலி கடுப்பாவார். ஆனாலும் அணிக்கு தேவையானதை அவர் செய்தாக வேண்டும். அதிரடியாக விளையாடும் இஷான் கிஷன் துவக்க வீரராக களமிறங்க வேண்டும். ரோகித் சர்மாவுடன் இணைந்து அவர் விளையாடும் பொழுது, ஓப்பனிங்கில் இடது-வலது பேட்டிங் இருந்தால் மிகவும் சிறப்பானது.

- Advertisement -

மூன்றாவது இடத்தில் சுப்மன் கில் விளையாட வேண்டும். நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான தொடரின் போது அவர் அதனை செய்திருக்கிறார். விராட் கோலி நான்காவது இடத்தில் களமிறங்க வேண்டும். முன்னதாக ராயுடுவிற்காக இந்த தியாகத்தை விராட் கோலி செய்திருக்கிறார். ராயுடு மூன்றாவது இடத்திலும் விராட் கோலி நான்காவது இடத்திலும் களம் இறங்கியுள்ளனர். வருகிற நியூசிலாந்து தொடரிலும் விராட் கோலி இந்த தியாகத்தை அணிக்காக செய்ய வேண்டும். அணியின் பேட்டிங் வரிசை சீரானதாக தெரியும்.” என்று வலியுறுத்தினார்.