தமிழக வீரரை தோனியுடன் ஒப்பிட்டு பேசிய பெங்களூர் கேப்டன் பாஃப் டூ பிளிசிஸ்

0
100
MS Dhoni and Faf du Plessis

ஐ.பி.எல்-ல் நேற்று நவி மும்பை டி.ஒய் பாட்டில் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

பெங்களூருக்கு அணிக்கெதிரான கொல்கத்தாவின் வெற்றி விகிதம் அதிகமிருப்பதும், ஐ.பி.எல்-ன் குறைந்த ஸ்கோரான 49 ரன்களுக்கு பெங்களூருவை கொல்கத்தா சுருட்டியிருப்பதும், பாஃப் டூ பிளிசஸ் உச்சக்கட்ட பார்மில் இருப்பதும் இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பை கூட்டியிருந்தது!

- Advertisement -

டாஸ் வென்ற பாஃப் பேட் செய்ய ஸ்ரேயாஷை அழைக்க, பேட் செய்ய களம் புகுந்த கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்களை நிமிரவிடாமல் செக் வைத்தபடியே இருந்தனர் பெங்களூர் பந்துவீச்சாளர்கள். இறுதியில் கொல்கத்தா அணி 128 ரன்களுக்கு தன் ஆட்டத்தை அமைதியாக முடித்துக்கொண்டது!

அடுத்து குறைந்த இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூர் அணி, தன் இரசிகர்களின் வயிற்றில் புளியைக் கரைத்து, இறுதியில் ஒருவாறாக வெற்றி பெற்றது. ஆனாலும் இரண்டொரு வீரர்களை மட்டுமே காலங்காலமாக நம்பியிருக்கும் பெங்களூர் அணிக்கு, பாஃப், விராட்கோலி உடனே ஆட்டமிழந்தும், மற்ற வீரர்களால் பெற்ற இவ்வெற்றி, புது நம்பிக்கை அளிக்கும்!

வெற்றிக்குப் பின் பெங்களூர் அணியின் கேப்டன் பாஃப் டூ பிளிசிஸ் கூறியதாவது

“மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. குறைந்த ஸ்கோரை நோக்கி ஆடும்பொழுது நன்றாய் துவங்க வேண்டும். நாங்கள் நம்பிக்கையோடோ தொடங்கினோம் ஆனால் அவர்களின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். பந்து சீக்கிரமே ஸ்விங் ஆனதுடன், பவுன்சும் ஆனது. இதே ஆடுகளம் இரண்டு மூன்று ஆட்களுக்கு முன் 200 ரன்கள் அடிக்கும்படி இருந்தது. இப்பொழுது 130 ரன்களுக்கு இருக்கிறது. இது மற்றுமொரு அனுபவம். எங்கள் பக்கம் மிகச்சிறந்த மனிதர்கள் இருக்கிறார்கள். எங்கள் குழுவுக்குள் தொடர்புகொள்ளுதல் நல்ல முறையில் உள்ளது. இவர்கள் சிறந்தவர்கள். இவர்கள் மிகவும் ஆதரவானவர்கள்” என்று கூறினார்…

- Advertisement -

மேலும் தமிழக வீரரான தினேஷ் கார்த்தி பற்றி பாஃப் கூறுகையில் “டி.கே பதட்டமில்லாது நின்று ஆட்டத்தை முடிப்பது என்று வந்தால் தோனியைப் போல் இருக்கிறார்” என்றார்!