இனி பும்ரா எதுக்கு நமக்கு??? அதைவிட மாஸ் பண்ற ஒருத்தர் கிடைத்துவிட்டார் – முன்னாள் இந்திய வீரர் கருத்து!

0
45371

பும்ராவை விட அபாரமாக செயல்பட்டு வருகிறார். இந்திய அணிக்கு அடுத்த மிகப்பெரிய வேகப்பந்து வீச்சாளராகவும் வருவார் என்று இளம்வீரரை குறிப்பிட்டு பேசியுள்ளார் முன்னாள் வேப்பந்து பேச்சாளர் ஆர்பி சிங்.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்துவரும் முகமது சிராஜ், ஆரம்பகாலத்தில் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி ரன்களை வாரிக்கொடுத்து விமர்சனத்திற்கு ஆளானார். சமீபகாலமாக மிகவும் மேம்படுத்தப்பட்ட வேகப்பந்து வீச்சாளராக மாறியுள்ளார்.

- Advertisement -

கடந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி பவர்-பிளே ஓவர்களில் சராசரியாக 30 பந்துகளுக்கு ஒருமுறை விக்கெட் எடுத்து வந்தது. மேலும் பவர்-பிளே ஓவர்களில் சராசரி எக்கனாமி 8.47 ஆகவும் இருந்தது. ஆனால் இந்த சீசனில் இதுவரை 22 விக்கெட்டுகளை பவர்-பிளே ஓவர்களில் கைப்பற்றியுள்ளது. சராசரி 7.14 ஆகும். மேலும் சராசரியாக ஒவ்வொரு 14 பந்துகளுக்கும் ஒரு விக்கெடுகளை கைப்பற்றியுள்ளது.

இந்த அளவிற்கு தாக்கத்துடன் ஆர்சிபி அணி செயல்படுவதற்கு முக்கிய காரணம் முகமது சிராஜ் மட்டுமே. இவர் பவர்-பிளே ஓவர்களில் கிட்டத்தட்ட 10 விக்கெட்டுகளுக்கும் மேல் எடுத்துள்ளார். மொத்தமாக இந்த சீசனில் இதுவரை 9 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

மேலும் இந்திய அணியில் இதுவரை 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 38 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவரது சராசரி 4.38 ஆகும் சராசரியாக ஒவ்வொரு 19 பந்துகளுக்கும் ஒருமுறை விக்கெட்களை வீழ்த்தி வரும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இப்படி சிறப்பாக செயல்பட்டு வரும், தன்னை மேம்படுத்திக்கொண்ட முகமது சிராஜ் இந்திய அணியின் அடுத்த மிகப்பெரிய வேகப்பந்து வீச்சாளராக உருவாவார் என்று கருத்து தெரிவித்து, பிசிசிஐ அவரை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார் ஆர்பி சிங். அவர் கூறிதாவது:

“நான் முகமது சிராஜை பல வருடங்களாக பின் தொடர்ந்து வருகிறேன். அவரது செயல்பாடு இந்திய அணிக்கு வந்த பிறகு மிகச்சிறப்பாக உயர்ந்திருக்கிறது. மேலும் சரிவை சந்திக்கும்போதெல்லாம் தன்னுடைய பந்துவீச்சை மேம்படுத்திக்கொண்டு இன்னும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

உதாரணமாக, கடந்த வருடம் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. ஆனால் இந்த வருடம் கூடுதல் பயிற்சி எடுத்துக்கொண்டு தனது பந்துவீச்சில் பல மாற்றங்களை செய்து அபாரமாக செயல்பட்டு வருகிறார். ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் பந்தை வைத்து திணறடிக்கிறார். லைன் மற்றும் லேந்த் இரண்டுக்கும் துல்லியம் கூடியிருக்கிறது.

இந்திய அணியில் பும்ரா ஏற்படுத்திய தாக்கம் சிறந்தது. அதற்கு சற்றும் குறைவில்லாமல் செயல்பட்டு வருகிறார். அடுத்த பெரிதும் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய பந்துவீச்சாளராக பார்க்கிறேன். இந்த சீசன் பவர்-பிளே ஓவர்களில் துல்லியமாக பந்துவீசி நிறைய விக்கெட்டுகளையும் வீழ்த்தி மேம்படுத்திக்கொண்டுள்ளார். இந்திய அணை நிர்வாகம் இவரை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இருக்கிறார். அங்கு இவரது செயல்பாடு கவனிக்கத்தக்கதாக இருக்கும்.” என்றார்.