“இந்தியாவை குறை சொன்னார்.. மிக்கி ஆர்தர் பாகிஸ்தான் அணியில் யார்?” – சல்மான் பட் சரமாரியான தாக்கு!

0
5606
Butt

பாகிஸ்தான அணி ஏறக்குறைய தன்னுடைய அரையிறுதி வாய்ப்பை இழந்து, இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

இன்று விளையாடும் பாகிஸ்தான் அணியில் முகமது நவாஸ், சதாப் கான், இமாம் உல் ஹக் மூன்று பேரும் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு பதிலாக பகார் ஜமான், ஆஹா சல்மான் மற்றும் உசாமா மிர் மூன்று பேரும் வந்திருக்கிறார்கள்.

- Advertisement -

இன்றைய போட்டிக்கு முன்பாக எல்லா சலசலப்புகளுக்கும் பதில் அளிக்கும் விதமாக, தற்போது பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்து வரும் கிராண்ட் பிராட்பர்ன் மிகவும் வெளிப்படுத்த தன்மையுடன் எந்தவித பாசாங்கும் இல்லாமல் பேசி இருந்தார்.

அவருடைய பேச்சில் பாகிஸ்தான் அணி குறித்தான எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் இருந்தது. ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் வந்திருந்தாலும் கூட நாங்கள் உலகின் சிறந்த அணியாக இருந்ததில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டு இருக்கிறார். மேலும் அவருடைய பேச்சிலிருந்து எந்த ஒரு சச்சரவையும் உருவாக்க முடியாத அளவுக்கு சரியாக அமைந்திருந்தது.

ஆனால் அதே சமயத்தில் பாகிஸ்தானின் முன்னாள் தலைமை பயிற்சியாளராக இருந்த மிக்கி ஆர்தர் இப்பொழுது பாகிஸ்தான் அணியின் இயக்குனராக ஒரு பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

அவர் இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது, தொடரை நடத்துவது ஐசிசி போல தெரியவில்லை பிசிசிஐ போல இருக்கிறது, ஒரு தலைப்பட்சமாக நடக்கிறது என்று கூறியிருந்தார். இது பாகிஸ்தான் அணிக்குத்தான் பெரிய அழுத்தமாக மாறியது. பாகிஸ்தான் முன்னாள் வீரர்களே இதைக் கண்டித்தார்கள்.

தற்போது இதுவெல்லாம் குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கூறும் பொழுது “முன்பு பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக மிக்கி ஆர்தர் இருந்த பொழுது, டெஸ்ட் கிரிக்கெட்டில் எங்களது பேட்டர்கள் சிலர் மெதுவாக விளையாடுகிறார்கள் என்று கூறினார். ஆனால் நாங்கள் அப்பொழுது மூன்று நாட்களில் போட்டியை தோற்றுக் கொண்டிருந்தோம். இவர் எப்படி பாகிஸ்தானின் பயிற்சியாளர் என்று என்னால் இதுவரை புரிந்து கொள்ள முடியவில்லை.

பாகிஸ்தான அணியில் இவருக்கு வேறு விதமான என்ன பங்கு இருக்கிறது என்றும் தெரியவில்லை. இந்தியா பாகிஸ்தான் போட்டியே ஐசிசி நடத்தவில்லை பிசிசிஐ யை நடத்தியது என்கிறார். தில் தில் பாகிஸ்தான் பாடல் போடவில்லை என்கிறார். இவர் ஒரு வித்தியாசமான ஆள்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் தவறான நேரத்தில் தவறான விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு செய்தி சேனலும் என்னென்னவோ சொல்கிறது. இன்சமாம் தற்பொழுது பதவியில் இருந்து விலகி இருக்கிறார். இது நல்ல விஷயம்தான்!” என்று கூறி இருக்கிறார்!